இலங்கை

இலங்கையில் அதிர்ச்சி – துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழப்பு

  • January 22, 2024
  • 0 Comments

மாத்தறை – பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்தை – கஹவத்த வெளியேறும் பகுதிக்கு அருகில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார். டிபெண்டர் ரக வாகனமொன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து கெப்ரக வாகனமொன்றில் பிரவேசித்தவர்கள் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன், துப்பாக்கிச் […]

பொழுதுபோக்கு

ஷாலினியை பணம் கொடுத்து திருமணம் செய்தாரா அஜித்? இது என்ன புது டுவிஸ்ட்டா இருக்கு….

  • January 22, 2024
  • 0 Comments

அஜித் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனியுடன் முதல் முறையாக அஜித் இணைந்து இருப்பதால், இப்படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. அசர்பைஜானில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் இறுதி வரை நடக்கும் என சொல்லப்படுகிறது. லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் போன்ற நட்சத்திரங்களும் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தில் நடிக்க ரூ. 105 […]

இலங்கை

கொழும்பில் அமுலாகும் நடைமுறை – சாரதிகளுக்கு எச்சரிக்கை

  • January 22, 2024
  • 0 Comments

கொழும்பு நகரில் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை கண்காணிப்பதற்காக பொலிஸாரினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதிய CCTV கண்காணிப்பு அமைப்பு இன்று முதல் செயற்படுத்தப்படவுள்ளது. அதன்படி கொழும்பிற்குள் நுழையும் வாகனங்கள் 108 சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். இந்த புதிய முறையின் கீழ், தொலைதூரத்தில் இருந்து கொழும்புக்கு வரும் சாரதி ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறி பிடிபட்டால், அது தொடர்பான அபராத சீட்டு அவர் வசிக்கும் பகுதியில் உள்ள பொலிஸார் மூலம் வழங்கப்படும். இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என சாரதிகளுக்கு […]

செய்தி

ஆஸ்திரேலியா மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்க புதிய நடைமுறை

  • January 22, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியா மக்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குவதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. பணவீக்கம் அதிகரித்துள்ளதால் பலர் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. நிலைமையைக் குறைக்க நடவடிக்கை எடுப்பதே எதிர்பார்ப்பு என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். அரசாங்கம் புதிய பொருளாதார திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அரசாங்கத்தின் பாராளுமன்ற பிரதிநிதிகள் தயாராக இருப்பதாக பிரதமர் கூறுகிறார். ஆஸ்திரேலியா நாடாளுமன்றம் ஆறாம் திகதி மீண்டும் கூடுகிறது. அதற்கு முன், வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் கொள்கை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

வட்டம் போட்டால் போதும்! Google Lens அறிமுகம் செய்த புதிய வசதி

  • January 22, 2024
  • 0 Comments

உலகிலேயே மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தான். இது ஒரு நாளைக்கு சுமார் 8 பில்லியனுக்கும் அதிகமான முறை பிராசஸ் செய்யப்பட்டு, 1 நொடிக்கு உலக அளவில் 1 லட்சம் சர்ச்சுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கூகுளில் Circle to Search என்ற புதிய அம்சம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதுவரை கூகுளில் எதையாவது ஒன்றை தேட வேண்டும் என்றால் நமக்கு என்ன வேண்டும் என்பதை டைப் செய்தால் மட்டுமே அறிந்து கொள்ள […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் முதல் தரவு மையத்தை உருவாக்கும் Google – 790 மில்லியன் பவுண்ட் முதலீடு

  • January 22, 2024
  • 0 Comments

பிரித்தானியாவில் Google தனது முதல் தரவு மையத்தை உருவாக்க 790 மில்லியன் பவுண்ட் முதலீடு செய்துள்ளது. ஹெர்ட்போர்ட்ஷையரில் உள்ள வால்தம் கிராஸில் 33 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த கட்டுமானப் பணிகள் 2025ஆம் ஆண்டு நிறைவடையும் என நம்புவதாகவும் தொழில்நுட்ப நிறுவனமான நிறுவனம் தெரிவித்துள்ளது. எத்தனை வேலைகள் உருவாக்கப்படும் என்று கூறுவது மிக விரைவில் ஆனால் அதற்கு பொறியாளர்கள், திட்ட மேலாளர்கள், தரவு மைய தொழில்நுட்ப வல்லுநர்கள், எலக்ட்ரீஷியன்கள், கேட்டரிங் மற்றும் பாதுகாப்பு […]

செய்தி

இலங்கை அமைச்சரவையில் மாற்றம் – பசிலின் கோரிக்கைக்கு ரணில் இணக்கம்

  • January 22, 2024
  • 0 Comments

எதிர்வரும் பெப்ரவரி மாதம் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொளள்ப்படவுள்ளதாக அரசாங்க  தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த தேர்தலை இலக்கு வைத்து இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திருத்ததத்தின் போது பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சுப் பதவிகளை வழங்குமாறு விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனித் தனியாக இருக்கும் நிறுவனங்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதை காட்டி இந்த திருத்தத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது. எவ்வாறாயினும், சர்வதேச […]

ஆசியா

சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த நூற்றுக் கணக்கான குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

  • January 22, 2024
  • 0 Comments

சிங்கப்பூர் வாடகை வீடுகளில் இருந்த சுமார் 400 குடும்பங்கள் புதிய வீடுகளுக்குச் சென்றுள்ளன. வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் இடமாற்றத் திட்டத்தின் ஒருபகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழைய குடியிருப்புப் பேட்டைகளைப் புதுப்பிப்பதற்கான திட்டத்தின் ஓர் அங்கமாக அவர்கள் இடம் மாற்றப்பட்டுள்ளனர். மேலும் சிறந்த வீடுகளையும் வசதிகளையும் சிங்கப்பூரர்களுக்கு வழங்கவேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் நோக்கமாகும். எடுத்துக்காட்டாக, தோ பாயோ லோரோங் 5இல் வாடகை வீடுகள் கொண்ட புளோக்குகள் 29, 31இன் குடியிருப்பாளர்கள் திட்டத்தின்படி கடந்த ஆண்டு மே […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் குழு மோதலில் சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • January 22, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 14 வயதுடைய சிறுவன் ஒருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். ஜனவரி மாதம் 17ஆம் திகதி மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரயில் நிலையத்துக்கு நேற்று மாலை குழு மோதல் ஒன்று இடம்பெற்றது. பதின்ம வயதுடைய சிறுவர்கள் பலர் ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதன் போதே குறித்த 14 வயதுடைய சிறுவன் மீது வாள் வெட்டு இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மிக துல்லியமான தகவல்கள் வெளியாகவில்லை என்றபோதும், சிறுவன் சம்பவ இடத்திலேயே […]

ஐரோப்பா

ஜெர்மனியில் உதவி பணம் பெறுபவர்களுக்கு வெளியான தகவல்

  • January 22, 2024
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சமூக உதவி பணம் குறைக்கப்படுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் சமூக உதவி பணத்தை குறைக்க வேண்டும் என்று ஜெர்மனியின் பிரதாக எதிர்க்கட்சியான CDUCSE கட்சி கடந்த காலங்களில் வேண்டுதலை விடுத்து இருக்கின்றது. அதாவது எதிர்வரும் சனிக்கிழமை இவர்களது கட்சி கூட்டத்தின் பொழுது இந்த விடயம் தொடர்பான சில பிரரணைகளை இயற்றுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இதேவேளையில் CDU கட்சியுடைய செயலாளரான காசல் லிண்டம் […]