தேனி கொண்டு செல்லப்பட்ட பாடகி பவதாரிணியின் உடல்!
இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி ஜனவரி 25-ஆம் திகதி இலங்கையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்,இலங்கையில் சமீபத்தில் புற்றுநோய்க்கு ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி காலமானார். இவருடைய மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில், கல்லீரல் புற்றுநோய் காரணமாக காலமான பவதாரணியின் உடல், தேனியில் இருக்கும் இளையராஜாவின் பண்ணை வீட்டில் அவரது தாயார் சின்னதாய் மற்றும் அவரது மனைவி ஜீவா ஆகியோரது உடல் அருகே இன்று நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. […]












