இலங்கை செய்தி

வைத்தியர்களின் தேவைக்கேற்ப எரிபொருள் விநியோகம்

  • March 16, 2026
  • 0 Comments

வைத்தியர்களின் தேவைக்கு ஏற்ப எதிர்காலத்தில் எரிபொருளை விநியோகிக்க எதிர்பார்ப்பதாக சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். சேவைத் தேவையின் அடிப்படையில் வழங்கப்படும் எரிபொருள் அளவைக் குறிப்பிடும் சுற்றறிக்கையொன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, விசேடமான தொழில் பிரிவுகள் மற்றும் விசேட அபிவிருத்தி திட்டங்களில் ஈடுபடும் வாகனங்களும் உள்ள நிலையில் அவை தொடர்பான தனித்தனியான வழிகாட்டல்கள் மற்றும் சுற்றறிக்கைகள் வெளியிப்படும் என்றும் அவர் கூறினார். இவை அடுத்த இரண்டு அல்லது மூன்று […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஊக்கத்தொகை

  • March 16, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் அதிகரித்து வரும் இளைஞர் வேலையின்மை பிரச்சினையை எதிர்கொள்ள புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தொழிற்கட்சி அரசின் அண்மைய திட்டத்தின் கீழ், இளைஞர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி ஊக்கத்தொகை வழங்க உள்ளது. இதன்படி, 18 முதல் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் சலுகைகளைப் பெற்று ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை தேடி வரும் நிலையில் இருந்தால், அவர்களை வேலைக்கு அமர்த்தும் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் £3,000 மானியம் வழங்கப்படும். மேலும், நீண்டகாலமாக வேலையின்றி உள்ளவர்களை வேலைக்கு […]

இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார்? 31 ஆம் திகதி நடக்கப்போவது என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

“ உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் ‘பிரதான சூத்திரதாரி’ யார் என்பது குறித்த தகவலை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வெளிப்படுத்தவுள்ளேன்.” இவ்வாறு பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி உதய கம்மன்பில Udaya Gammanpila அறிவித்துள்ளார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அறிவிப்பை விடுத்தார். கடந்த ஒன்றரை வருடங்களாகத் தாம் மேற்கொண்ட விரிவான ஆய்வுகளின் அடிப்படையில், ‘உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி […]

ஐரோப்பா செய்தி

ஹார்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் – நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்திட்டத்தை உருவாக்கும் பிரித்தானியா

  • March 16, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உரிய திட்டத்தை செயல்படுத்த பிரித்தானியா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாக பிரதமர் ஸ்டார்மர் (Starmer) தெரிவித்துள்ளார். டவுனிங்கில் இன்று ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அமெரிக்காவின் நடவடிக்கைகள் ஈரானில் உள்ள “வெறுக்கத்தக்க ஆட்சியின்” இராணுவத் திறனை பெருமளவு பலவீனப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எனினும், மோதலுக்குப் பிறகு ஈரானின் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பும் திறனை கட்டுப்படுத்தவும், சர்வதேச கப்பல் போக்குவரத்தை பாதுகாக்கவும் பேச்சுவார்த்தை அடிப்படையிலான ஒப்பந்தம் […]

ஐரோப்பா செய்தி

மோதலை தணிப்பதே சிறந்த தீர்வு – பிரித்தானிய பிரதமர் வலியுறுத்தல்

  • March 16, 2026
  • 0 Comments

மக்கள் எதிர்கொள்ளும் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என பிரதமர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஈரானில் போர் நீடித்தால் பொருளாதார தாக்கங்களால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரசாங்கம் எந்தளவுக்கு உதவிகளை வழங்கும் என பிபிசியின் அரசியல் ஆய்வாளர் கிறிஸ் மேசன் (Chris Mason) எழுப்பிய கேள்விக்கே பிரதமர் இவ்வாறு பதிலளித்தார். மக்களை கருத்திற்கொண்டே எரிசக்தி கட்டண வரம்பு போன்ற நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் பிரமர் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்வரும் மூன்று முதல் ஆறு மாதங்களில் நிலைமை […]

உலகம்

Oscar இல் புது வரலாறு: 98 வருடங்களில் யாரும் செய்யாத சாதனை!

  • March 16, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் இன்று அதிகாலை நடைபெற்ற ஒஸ்கர் விருது வழங்கும் விழாவில், Autumn Durald Arkapaw புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். Sinners திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த Oscar விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒஸ்கர் விருதுப் பட்டியலில், இத்தனை ஆண்டுகளாக சிறந்த ஒளிப்பதிவு என்ற விருதுக்குச் சொந்தக்காரர்களாக ஆண்கள் மட்டுமே இருந்த வந்த நிலையை மாற்றி  Autumn Durald Arkapaw , சின்னர்ஸ் (Sinners) திரைப்படத்தின் ஒளிப்பதிவுக்கான சிறந்த ஒஸ்கர் விருதைப் பெற்றுள்ளார். இதன் […]

உலகம் செய்தி

“ ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை நேட்டோ போர் அல்ல” – பிரிட்டன் அமைச்சர் சுட்டிக்காட்டு

  • March 16, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை ‘நேட்டோ போர்’ Nato war கிடையாது என்று பிரிட்டன் அமைச்சர் Pat McFadden சுட்டிக்காட்டினார். நேட்டோ Nato அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று தாக்கப்பட்டால் அதற்கு எதிராக அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என 5 ஆம் சரத்தில் (Article 5) குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், மேற்படி கொள்கை, இது போன்ற தன்னிச்சையான போர்களுக்குப் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். கூட்டணி நாடுகளைக் […]

உலகம் செய்தி

பிரிட்டன் போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும்: முன்னாள் பாதுகாப்பு பிரதானி பரிந்துரை

  • March 16, 2026
  • 0 Comments

ஈரானுடனான போரின்போது அமெரிக்காவிற்கு ஆதரவாக பிரிட்டன் தனது போர்க்கப்பல்களை அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்புப் படைத் தளபதி ஜெனரல் சர் நிக் கார்ட்டர் , Gen Nick Carter தெரிவித்துள்ளார். உலகப் பொருளாதாரத்தைப் பாதுகாக்கவும், ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள தடைகளை நிவர்த்தி செய்வதற்கும் இத்தகைய இராணுவ நடவடிக்கை பிரிட்டனின் தேசிய நலனுக்கு மிகவும் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஈரானிய கடற்படையின் பலத்தை விட புரட்சிகர காவல்படையின் ஏவுகணைகள் மற்றும் கண்ணிவெடிகள் போன்ற நவீன […]

அரசியல் இலங்கை செய்தி

“புலிகள் கொழும்பில் தாக்குதல் நடத்தியபோதுகூட பொருளாதாரம் முடங்க இடமளிக்கவில்லை”

  • March 16, 2026
  • 0 Comments

“நாட்டில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றின்போது ஜே.வி.பியினர் பொறுப்பற்ற விதத்திலேயே செயல்பட்டனர்.” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், தாம் தற்போது எதிரணியில் இருந்தாலும் நாட்டுக்கு தீங்கு விளைவிக்ககூடிய எந்தவொரு செயலிலும் ஈடுபடமாட்டோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் Sagara Kariyawasam கூறினார். கொழும்பில் இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “நாட்டில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டவேளை அதனை வைத்து ஜே.வி.பியினர் அரசியல் செய்தனர். […]

இந்தியா

இந்திய கப்பல்களுக்கு மட்டும் ஈரான் அனுமதி வழங்குவதன் பின்புலம் என்ன?

  • March 16, 2026
  • 0 Comments

  ஹார்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்கள் பயணிப்பதற்கு நட்பின் அடிப்படையிலேயே ஈரான் அனுமதி வழங்கியது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் S. Jaishankar தெரிவித்தார். இது தொடர்பில் பிரதிபலனாக ஈரான்எதையும் பெறவில்லை எனவும் அவர் கூறினார் ‘‘ உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதம் ஹார்முஸ்நீரிணை வழியாகவே நடைபெறுகின்றது. எனவே, இந்த பாதையை மீண்டும் திறக்கப்படுவதற்காக ஈரானுடன் இந்தியா பேச்சுசு நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை நடத்தாமல் தொடர்பை துண்டித்துக் கொள்வதைவிட, அவர்களுடன் பேசுவதும், புரிந்து […]