உலகம் செய்தி

“ ஈரான்மீதான இராணுவ நடவடிக்கை நேட்டோ போர் அல்ல” – பிரிட்டன் அமைச்சர் சுட்டிக்காட்டு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கை ‘நேட்டோ போர்’ Nato war கிடையாது என்று பிரிட்டன் அமைச்சர் Pat McFadden சுட்டிக்காட்டினார்.

நேட்டோ Nato அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடொன்று தாக்கப்பட்டால் அதற்கு எதிராக அனைத்து உறுப்பு நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என 5 ஆம் சரத்தில் (Article 5) குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், மேற்படி கொள்கை, இது போன்ற தன்னிச்சையான போர்களுக்குப் பொருந்தாது என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கூட்டணி நாடுகளைக் கட்டாயப்படுத்தி இத்தகைய மோதல்களில் ஈடுபடுத்த முடியாது .

பிரிட்டன் நேட்டோ அமைப்பின் மீது கொண்டுள்ள உறுதியான அர்ப்பணிப்பு தொடரும் எனவும் பிரிட்டன் அமைச்சர் Pat McFadden கூறினார்.

ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி உள்ளார்.

அவ்வாறு ஆதரவளிக்க தவறினால், அந்த அமைப்பு மிக மோசமான எதிர்காலத்தைச் சந்திக்க நேரிடும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ என்பது வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவைச் சேர்ந்த 31 நாடுகளை உள்ளடக்கிய ஒரு இராணுவக் கூட்டணியாகும்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி