இலங்கை

இலங்கையில் காதலனுக்கு அதிர்ச்சி கொடுத்த காதலி

கம்பளையில் காதலனை கத்தியால் குத்தி காயப்படுத்திய யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 19 வயதுடைய யுவதியாவார். இவர் 22 வயது இளைஞர் ஒருவருடன் ஒன்றரை வருட காலமாக காதலித்து வந்துள்ளார்.

இந்த இளைஞர் கடந்த சில நாட்களாக யுவதியுடனான காதலை முறித்துக் கொள்ள முயன்ற நிலையில் இது தொடர்பில் யுவதியிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த யுவதி, இளைஞருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பில் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், யுவதி தனது சகோதரன் மற்றும் தாயுடன் இளைஞனை சந்திப்பதற்காக மீன் சந்தை ஒன்றிற்குள் சென்றிருந்த நிலையில் இரு தரப்பிற்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் யுவதி இந்த இளைஞரை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட யுவதி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்