ஈரானில் தனது குடும்ப உறுப்பினர்கள் 12 பேரை கொன்று குவித்த மர்ம நபர்!
தென்கிழக்கு ஈரானில் உள்ள தொலைதூர கிராமப்புற பகுதியில் 30 வயது நபர் ஒருவர் தனது உறவினர்கள் 12 பேரை சுட்டுக்கொன்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது பல தசாப்தங்களில் இடம்பெற்ற மிக மோசமான துப்பாக்கிச் சூடு என விமர்சிக்கப்படுகிறது. கெர்மன் மாகாணத்தின் நீதித்துறைத் தலைவர் இப்ராஹிம் ஹமிடி, குடும்பத் தகராறு காரணமாக ஒரு கிராமத்தில் அதிகாலையில் தனது தந்தை, சகோதரர் மற்றும் பிற உறவினர்கள் மீது துப்பாக்கிதாரி துப்பாக்கியால் சுட்டதாக ISNA செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். […]













