இந்தியாவில் இறந்ததாக கருதிக் கொள்ளி வைக்கும் நேரத்தில் கண்விழித்த பெண்ணால் அதிர்ச்சி
இந்தியாவின் ஒடிஷா (Odisha) மாநிலத்தில் இறந்ததாக நம்பப்பட்ட ஒரு பெண்ணுக்குக் கொள்ளி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது கண்விழித்து அனைவரையும் அதிர்ச்சிக்காளாக்கியுள்ளார். 52 வயதுப் பெண் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவரே இவ்வாறு கண்விழித்துள்ளார். இம்மாதம் முதலாம் திகதி தீச் சம்பவத்தில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பணப் பற்றாக்குறையின் காரணமாக அவரின் கணவர் சிபாராம் பாலோவால் மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க இயலவில்லை. தனால் பாலோ மனைவியை வீட்டிற்குக் கொண்டுசென்றுள்ளார். இம்மாதம் 12ஆம் திகதி மனைவி கண் திறக்கவில்லை […]













