இலங்கை

மியன்மார் பயங்கரவாத குழுவால் மற்றுமொரு இலங்கையர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்!

  • February 24, 2024
  • 0 Comments

மியன்மார் பயங்கரவாத குழுவால் மற்றுமொரு இலங்கையரும் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மாருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் அங்கு சைபர் அடிமைகளாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒருவர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலங்கையர் மியான்மரில் பயங்கரவாதிகளால் அழைத்துச் செல்லப்படுவதை காணொளியாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட தகவலுக்கு […]

இலங்கை

“இலங்கையில் இரவு பொருளாதார முக்கிய பங்கு வகிக்கும்”: டயானா கமகே வலியுறுத்தல்

சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, பொருளாதார வளர்ச்சியை உந்துவதில் இரவு வாழ்க்கையின் முக்கியப் பங்கை வலியுறுத்தியுள்ளார். ஒரு நாட்டின் வருவாயில் கணிசமான 70 சதவீதத்தை இரவுப் பொருளாதாரம் கொண்டுள்ளது என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர். இரவு வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அவர், இரவு நேரம் என்பது மக்கள் பொதுவாக உணவு மற்றும் பொழுதுபோக்கு போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், இதன் விளைவாக வரிகள் மூலம், குறிப்பாக கலால் வரிகள் மூலம் அதிக வருவாய் ஈட்டுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். […]

இலங்கை

குருநாகல் வைத்தியசாலையில் சிறுநீரக சிகிச்சைகளை நிறுத்த நடவடிக்கை!

  • February 24, 2024
  • 0 Comments

குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கான டயாலிசிஸ் சிகிச்சைப் பிரிவை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பல சிறுநீரக நோயாளர்கள் உயிரிழந்ததைக் கருத்தில் கொண்டு நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த பிரிவில் இருந்து டயாலிசிஸ் செய்துகொண்ட 05 சிறுநீரக நோயாளர்கள் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாக்டீரியா தொற்று […]

இந்தியா

தண்ணீர் பிடிக்க சென்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பொல குப்பம் ரோடு பாரதிதாசன் நகர் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற பாடசாலை சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இவர் திண்டிவனத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”பாரதிதாசன் பேட்டையில் உள்ள அவரது வீட்டு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான குடிநீர் டேங்க கில் தண்ணீர் பிடிக்க சென்றதாக கூறப்படுகிறது. இதன்போது தேவேந்திரன் மீது மின்சாரம் தாக்கியுளளது. சம்பவத்தை கண்ட […]

ஆசியா

சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: 15 பேர் பலி, 44 பேர் படுகாயம்

  • February 24, 2024
  • 0 Comments

சீனாவின் நான்ஜிங் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிய தொடங்கியதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பொதுமக்கள் வெளியே ஓடி வந்தனர். இந்த தீ விபத்தில் பலர் தீ மற்றும் புகை மூட்டத்தில் சிக்கிக்கொண்டனர். இந்த கோர விபத்தில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 44 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி பொலிஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் […]

இலங்கை

கொள்கலன் ஒன்றில் மறைந்து மலேசியாவிற்கு தப்பிசெல்ல முற்பட்ட இரு இலங்கையர்கள் கைது!

  • February 24, 2024
  • 0 Comments

கொள்கலன் ஒன்றில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயன்ற போது சீனாவில் கைது செய்யப்பட்ட இரண்டு இலங்கையர்களும் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று (24.02) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுகிறது. இந்த இரண்டு சந்தேக நபர்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்றப்பட்ட வெற்று கொள்கலனில் மறைந்திருந்து மலேசியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர். 26 வயதான மதி ராஜேந்திரன் மற்றும் 39 வயதான ஜெயக்குமார் தருமராசா […]

ஐரோப்பா

உக்ரைனுக்கு விஜயம் செய்த மேற்கத்திய தலைவர்கள்

ரஷ்யாவின் படையெடுப்பின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளில் உக்ரைனுடன் ஒற்றுமையைக் காட்ட இத்தாலி, கனடா மற்றும் பெல்ஜியம் பிரதமர்கள் உட்பட நான்கு மேற்கத்திய தலைவர்கள் இன்று கிய்வ் வந்தடைந்தனர். இத்தாலியின் ஜியோர்ஜியா மெலோனி, கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ, பெல்ஜியத்தின் அலெக்சாண்டர் டி க்ரூ மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் அண்டை நாடான போலந்தில் இருந்து இரயில் மூலம் உக்ரைன் தலைநகருக்கு இரவோடு இரவாக பயணித்ததாக இத்தாலிய அரசாங்கம் ஒரு அறிக்கையில் […]

தமிழ்நாடு

திருப்பூர் – தாராபுரத்தை அடுத்த மூலனூரில் பட்டா மாறுதலுக்கு லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ கைது

  • February 24, 2024
  • 0 Comments

தாராபுரம் அடுத்த மூலனூரை சேர்ந்தவர் சேகரன் (45) இவர் பட்டா மாறுதலுக்காக கடந்த 9ம் திகதி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் சண்முகம் (40) இது தொடர்பாக விசாரணை நடத்த சேகரனை அழைத்துள்ளார். அப்போது பட்டா மாறுதல் செய்து கொடுக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வேண்டு மென சண்முகம் கேட்டதாக தெரிகிறது.இந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத சேகரன், இது குறித்து திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை பொலிஸாருக்கு தகவல் […]

இலங்கை

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: விரைவில் இலங்கைக்கு நாடு கடத்தப்படும் சாந்தன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டர்களில் ஒருவரான சாந்தனை உடனடியாக நாடு கடத்துவதற்கான அவசர பயண ஆவணத்தை மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அதிகாரி (FRRO) வெளியிட்டுள்ளார். திருச்சி சிறப்பு முகாமில் தற்போது அடைக்கப்பட்டுள்ள சாந்தனை, திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு அதிகாரிகள் அழைத்துச் செல்லவுள்ளனர். சாந்தனின் கோரிக்கையின் பேரில், இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் அவருக்கு தற்காலிக பயண ஆவணத்தை வழங்கியது, இப்போது நாடு கடத்த சென்னையிலுள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு […]

இலங்கை

தேர்தலை பிற்போட இடமளிக்க மாட்டோம் – நாமல்

  • February 24, 2024
  • 0 Comments

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டில் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்த முடியும் என்ற போதிலும் தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி மிகவும் தவறானது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்புக்கு புறம்பாக தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்திற்கு இல்லை. […]