போதை தலைக்கேறி கல்லூரி மாணவனைக் கொன்று புதைத்த நண்பர்கள்!
உத்தரப்பிரதேசத்தில் கல்லூரி மாணவரை அடித்துக் கொலை செய்து புதைத்த நண்பர்களை பொலிஸார் தேடி வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பல்கலைக் கழகத்தில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்தவர் யஷ் மிட்டல். கடந்த பிப்ரவரி 27ம் திகதி கல்லூரிக்குச் சென்ற யஷ் மிட்டல் அதன் பின் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கிரேட்டர் நொய்டா காவல் நிலையத்தில் யஷின் தந்தை பிரதீப் மிட்டல் புகார் செய்தார். இதன் பேரில் பொலிஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். […]













