ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நெருக்கடி: 6 எரிபொருள் கப்பல்களின் பயணம் ரத்து!

  • March 22, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியாவுக்கு எரிபொருள் ஏற்றி வர வேண்டிய ஆறு எண்ணெய் கப்பல்களின் பயணம் தடைபட்டுள்ளதால் எரிசக்தி விநியோகத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச அளவில் நிலவும் விநியோக மாற்றங்களால் இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள போதிலும், அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவிடம் தற்போது போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதால், பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்று அவர் கேட்டுக்கொண்டார். பயணத்தை இரத்து செய்த கப்பல்களுக்குப் பதிலாக மாற்று வழிகளில் எண்ணெயைப் பெறுவதற்கான […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தென் பகுதியை பதம் பார்த்த ஈரான் ஏவுகணை!

  • March 22, 2026
  • 0 Comments

ஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் இஸ்ரேலின் தென் பகுதியில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. வான்வழிப் பாதுகாப்பு அமைப்புகள் செயலிழந்ததால், ஆரத் Arad நகரை ஏவுகணைத் தாக்கியுள்ளது. இதில் சுமார் 88 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அணுசக்தி நிலையத்திற்கு அருகிலுள்ள டிமோனா Dimona நகரிலும் மேற்படி தாக்குதலால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதேவேளை, ஈரானில் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட இலக்குகள்மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா என்பன தாக்குதல் நடத்தியுள்ளது.

இலங்கை

சினோபெக் நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது

  • March 22, 2026
  • 0 Comments

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலைகளை அதிகரித்ததைத் தொடர்ந்து, சினோபெக் (Sinopec) நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதன்படி, Sinopec நிறுவனத்தின் ஒக்டேன் 95 பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 122 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை 487 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலையை 219 ரூபாவினால் அதிகரிக்க அந்த நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அதன் புதிய விலை 572 ரூபாவாகும். இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி (LIOC) நிறுவனமும் […]

செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஈரானின் நேரடி எச்சரிக்கை

  • March 22, 2026
  • 0 Comments

ஈரானின் எரிபொருள் அல்லது எரிசக்தி வளங்கள் மீது ஏதேனும் தாக்குதல்கள் நடத்தப்பட்டால், அதற்குப் பதிலாக வளைகுடா பிராந்தியத்தில் உள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி உட்கட்டமைப்புகள் இலக்கு வைக்கப்படும் என அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவுக்கு தமது வான்பரப்பைப் பயன்படுத்தவோ அல்லது இராணுவத் தளங்களை வழங்கவோ அனுமதிக்கும் நாடுகள், ஈரானின் பதில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் எனத் தூதரக ரீதியாக எச்சரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, 48 மணித்தியாலத்துக்குள் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் விடுத்த அவசர உத்தரவு

  • March 22, 2026
  • 0 Comments

தெற்கு இஸ்ரேலின் ஆராட் (Arad) மற்றும் டிமோனா (Dimona) பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இஸ்ரேல் முழுவதும் இன்று மற்றும் நாளை நேரடி வகுப்புகளை இரத்து செய்வதாக அந்த நாட்டு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஆராட் மற்றும் டிமோனா பகுதிகளில் நடத்தப்பட்ட 2 ஏவுகணைத் தாக்குதல்களில் சுமார் 100 பேர் காயமடைந்ததைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் நேரடியாக சமூகமளித்து […]

உலகம் செய்தி

ஈரானுக்கு 48 மணிநேர காலக்கெடு விதித்த டொனால்ட் ட்ரம்ப்

  • March 22, 2026
  • 0 Comments

ஹோர்முஸ் நீரிணையை அடுத்த 48 மணிநேரத்திற்குள் திறந்துவிடாவிட்டால், ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களும் அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘Truth Social’ சமூக வலைதளத்தில் எச்சரித்துள்ளார். அந்தப் பதிவை இட்ட நேரத்திலிருந்தே இந்த 48 மணிநேரக் காலக்கெடு ஆரம்பமாவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மார்ச் 21 ஆம் திகதி GMT நேரப்படி 23:44 மணிக்கு இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். இதன்படி, எதிர்வரும் மார்ச் 23 ஆம் […]

இலங்கை செய்தி

இலங்கை – இந்திய கலாசார ஒத்துழைப்பு குறித்து உயர்ஸ்தானிகராலயத்தில் விசேட கவனம்

  • March 21, 2026
  • 0 Comments

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டு வரும் கலாசார ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்  இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது. அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றது. தற்போது நடைமுறையிலுள்ள பல கலாசாரத் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் கலாசார நிலையத்தை அந்தப் பகுதி மக்களிடம் கையளிப்பது மற்றும் அதன் […]

இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் தொட்டது எரிபொருள் விலை!

  • March 21, 2026
  • 0 Comments

இலங்கையில் இன்று (21) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு போர்ச்சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விலை அதிகரிப்பும் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே இலங்கையிலும் எரிபொருள் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றறொன்றின் 79 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, புதிய விலையாக 382 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 90 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு […]

உலகம் செய்தி

கடின நேரத்தில் ரஷ்யா, ஈரானின் நம்பகமான கூட்டாளியாக இருக்கும்

  • March 21, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ஈரானின் புதிய உச்ச தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் ஈரானிய புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். புடின் தனது செய்தியில், “இந்தக் கடினமான நேரத்தில் மாஸ்கோ, தெஹ்ரானுக்கு ஒரு விசுவாசமான நண்பராகவும் நம்பகமான கூட்டாளியாகவும் இருக்கும்” என்று கூறியுள்ளார்.   ஈரானிய மக்கள் “இந்தக் கடினமான சோதனைகளை கண்ணியத்துடன் கடந்து செல்லுவார்கள்” என்று நம்புவதாக மொஜ்தபா கமெனி மற்றும் மசூத் பெஷெஷ்கி ஆகியோரிடம் புடின் மேலும், குறிப்பிட்டார்.

உலகம் செய்தி

இஸ்ரேலை நோக்கி ஈரானிலிருந்து ஏவுகணைகள் -மக்களுக்கு அவசர எச்சரிக்கை

  • March 21, 2026
  • 0 Comments

கடந்த சில நிமிடங்களில் நாட்டை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை,  தெரிவித்துள்ளது. பாதுகாப்பு அமைப்புகள் இந்த அச்சுறுத்தலைத் தடுப்பதில் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு முன்னெச்சரிக்கை  அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பிட விபரங்களை வழங்கவில்லை என்றும் பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.