பிரான்ஸின் 6-ஆம் தலைமுறைப் போர் விமானத் திட்டத்தில் இணைய இந்தியா முயற்சி
பிரான்ஸ் தலைமையில் உருவாக்கப்பட்டு வரும் ஆறாம் தலைமுறைப் போர் விமான வளர்ச்சித் திட்டமான ‘ Future Combat Air System’ (FCAS) வேலைத்திட்டத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியப் பாதுகாப்பு இந்திய பாதுகாப்பு அமைச்சு இறங்கியுள்ளது.
அத்துடன், மேற்படி விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான வழிகாட்டலையும் பிரான்சிடம் இந்தியா கோரியுள்ளதாக நாடாளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையில்,
இன்றைய வான்வழிப் போர் முறையில் இந்தியாவின் வான் பாதுகாப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ஆறாம் தலைமுறை (6G) போர் விமானங்களின் உருவாக்கம் மற்றும் கொள்முதலுக்கான திட்டத்தை விரைவுபடுத்துமாறு பாதுகாப்பு அமைச்சகத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை, “2026-27 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மீதான நிலைக்குழுவின் 20-வது அறிக்கையில் உள்ள அவதானிப்புகள்/பரிந்துரைகள் மீது அரசு எடுத்த நடவடிக்கை” என்ற தலைப்பில் தாக்கல் செய்யப்பட்டது.




