உலகம்

அமெரிக்கர்களுக்கு அவசர எச்சரிக்கை!

  • March 23, 2026
  • 0 Comments

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அவசர அறிவுறுத்தல் விடுத்துள்ளது. குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கர்கள் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளதுடன், வான்வெளிகள் அவ்வப்போது மூடப்படுவதால் சர்வதேச விமானப் பயணங்களில் தடங்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கிற்கு வெளியேயுள்ள அமெரிக்கத் தூதரகங்கள் மற்றும் இராஜதந்திர அலுவலகங்கள் இலக்கு வைக்கப்படலாம் என இராங்காங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஈரானுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்கள் உலகம் முழுவதும் உள்ள […]

உலகம் செய்தி

தாக்குதல்கள் தீவிரம்: அடுத்த கட்டத்துக்கு செல்கிறது போர்!

  • March 23, 2026
  • 0 Comments

ஈரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்ற அமெரிக ஜனாதிபதி ட்ரம்பின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சம் தொட்டுள்ளது. ட்ரம்பி கூறியதுபோல நடந்தால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளை இலக்கு வைக்கப்படும் என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. குறிப்பாக, ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் பிராந்தியத்தின் எரிசக்தி வசதிகள் நிரந்தரமாக அழிக்கப்படும் என்றும், இதன் விளைவாக உலகளவில் எண்ணெய் விலை கடுமையாக உயரும் என்றும் […]

metabolic-health-vs-weight-loss-2026-infographic-tamil வாழ்வியல்

ஒல்லியாக இருப்பதை விட வலிமையாக இருப்பதே கெத்து! 2026-ல் மாறும் மக்களின் மனநிலை.

  • March 22, 2026
  • 0 Comments

கடந்த சில ஆண்டுகளாக “உடல் எடையைக் குறைப்பது” (Weight Loss) மட்டுமே ஆரோக்கியத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் அந்தச் சிந்தனை முற்றிலுமாக மாறியுள்ளது. மக்கள் இப்போது தங்களின் தோற்றத்தை விட, உடலின் உள் இயக்கம் மற்றும் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கு (Metabolic Health) அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். தற்போது மக்கள் முன்னுரிமை கொடுக்கும் விடயமானது “ஒல்லியாக இருப்பதுதான் அழகு” என்ற பழைய பிம்பம் உடைந்து, “ஆரோக்கியமாக இருப்பதே அழகு” என்ற புதிய புரிதல் […]

உலகம் செய்தி

அராட் நகருக்கு நெதன்யாகு விஜயம் – அலட்சியமாக இருக்க வேண்டாமென மக்களுக்கு எச்சரிக்கை

  • March 22, 2026
  • 0 Comments

தெற்கு இஸ்ரேலில் உள்ள அராட் (Arad) நகருக்கு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்டுள்ளார். அந்நகரை சனிக்கிழமை ஈரானிய ஏவுகணைகள் தாக்கியதில் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில் எவரும் யாரும் உயிரிழக்காதது ஒரு அதிசயம் என நெதன்யாகு கூறியுள்ளார். அவர், ஏவுகணை எச்சரிக்கைகளை அவதானித்து, மக்கள் உடனடியாக பாதுகாக்கப்பட்ட தங்குமிடங்களுக்குச் செல்ல வேண்டுமென வலியுறுத்துகிறார். கட்டிடங்களுக்கு இடையே ஏவுகணை வீழ்ந்தாலும், மக்கள் தங்குமிடங்களுக்கு சென்றிருந்தால் யாருக்கும் தீங்கு ஏற்பட்டிருக்காது என தெரிவித்துள்ளார். […]

உலகம் செய்தி

ஹெஸ்புல்லாவை இலக்குவைத்து தெற்கு லெபனானில் தீவிர தாக்குதல்கள் – IDF தகவல்

  • March 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) ஹெஸ்புல்லாவை இலக்குவைத்து தெற்கு லெபனான் மீது புதிய தாக்குதல்கள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளன. டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில், இந்த நடவடிக்கையில் தரைப்படைகள் மற்றும் விமானப்படைகள் ஈடுபட்டதாக கூறப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை முன்பாக வெளியிடப்பட்ட தனி அறிக்கையில், ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா குழுவின் ஒன்பது உறுப்பினர்கள் சனிக்கிழமை மாலை கொல்லப்பட்டுள்ளதாக IDF தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவு ஹெஸ்புல்லா இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசும் போது, லெபனான் அமெரிக்கா-இஸ்ரேல் போரில் ஈரானுக்கு எதிராக இழுக்கப்பட்டதாகவும், இஸ்ரேல் வான்வழித் […]

இலங்கை செய்தி

பஸ் கட்டண அதிகரிப்பு யோசனை நாளை அமைச்சரவைக்கு

  • March 22, 2026
  • 0 Comments

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை 10 வீதத்தினால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு யோசனை முன்வைத்துள்ளது. இது தொடர்பான யோசனையை நாளைய தினம் அமைச்சரவையில் முன்வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரெண்டா தெரிவித்துள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பை கோரி பஸ் உரிமையாளர்களுடன் இன்று இடம்பெற்ற சந்திப்பின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா செய்தி

லண்டன் இலக்கு? ஈரானிய ஏவுகணைகள் குறித்த தகவலை பிரிட்டிஷ் அரசு நிராகரித்தது

  • March 22, 2026
  • 0 Comments

லண்டனைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர ஏவுகணைகள் ஈரானிடம் இருப்பதாக இஸ்ரேல் கூறிய நிலையில், பிரித்தானியாவின் வீட்டுவசதித் துறை செயலாளர் ஸ்டீவ் ரீட் (Steve Reed) அதனை மறுத்துள்ளார். இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) சனிக்கிழமை வெளியிட்ட தகவலின்படி, ஈரானிடம் 4,000 கிலோமீற்றர் வரை சென்றடையக்கூடிய ஏவுகணைகள் உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதனை உறுதிப்படுத்த எந்தவொரு மதிப்பீடும் இல்லை என்றும், ஈரான் பிரித்தானியாவை இலக்குவைத்துள்ள அல்லது அத்தகைய திறன் கொண்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் இல்லை […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் – ஈரான் எச்சரிக்கை

  • March 22, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தனது மின் உற்பத்தி நிலையங்கள் தாக்கப்பட்டால் அமெரிக்காவுடன் தொடர்புடைய எரிசக்தி தளங்களை கடுமையாக தாக்குவோம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹார்முஸ் நீரிணை 48 மணி நேரத்திற்குள் திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை முற்றிலுமாக அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான இந்த நீர்வழிப்பாதை குறித்து தற்போது கவலை அதிகரித்துள்ளது. […]

உலகம் செய்தி

கட்டார் ஹெலிகொப்டர் விபத்தில் அறுவர் உயிரிழப்பு -பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

  • March 22, 2026
  • 0 Comments

கட்டாரில் இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் ஆறு பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஹெலிகொப்டர் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போதே இன்று இந்த அதிகாலை விபத்துக்குள்ளாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடுதல் முயற்சிகளின் விளைவாக, ஏழு பேரில் அறுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என அமைச்சகம் X தளத்தில் தெரிவித்துள்ளது. பின்னர் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், உயிரிழந்தவர்களில் இரண்டு துருக்கிய பொதுமக்களும் ஒரு துருக்கிய இராணுவ வீரரும் அடங்குவதாக அந்நாட்டின் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் கோர விபத்து – கடமையில் இருந்த 27 வயது பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

  • March 22, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஸ்வான்லியில் அவசர அழைப்புக்கு பதிலளித்து கொண்டிருந்தபோது இடம்பெற்ற கார் விபத்தில் காயமடைந்த இளம் பொலிஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஃபார்னிங்ஹாமில் (Farningham,) இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த அவர் இன்றைய தினம் உயிரிழந்துள்ளதாக கென்ட் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் வாகனமும் காரொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்தது. 27 வயதான பிராட்லி கோர்க் (Bradley Cork) என்ற அதிகாரியே விபத்தில் உயிரிழந்துள்ளார். அதே வாகனத்தில் இருந்த மற்றொரு பொலிஸார் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் […]