இலங்கை

தவணை முறையில் மின் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு!

மின் பாவனையாளர்கள் தமது புதிய இணைப்புகளுக்கான கொடுப்பனவுகளை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இதற்காக பயனாளர்கள் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும். எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும். இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் […]

இலங்கை

உயரும் வெப்பநிலை : இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

  • March 7, 2024
  • 0 Comments

இலங்கையில் வெப்பநிலையானது கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களத்தின் அறிவிப்பு வருமாறு,

ஐரோப்பா

ரஷ்யாவுடனான வங்கி விவகாரம் : ஆஸ்திரியாவை எச்சரித்துள்ள அமேரிக்கா

ஒரு உயர்மட்ட அமெரிக்க பொருளாதாரத் தடைகள் அதிகாரி இந்த வாரம் ஆஸ்திரியா மற்றும் ரைஃபிசென் பேங்க் இன்டர்நேஷனல் ஆகியவற்றிற்கு ரஷ்யாவில் வணிகம் செய்வதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரிப்பார் என்று தெரிவிக்கப்படுள்ளது. அங்குள்ள மிகப்பெரிய மேற்கத்திய வங்கியின் மீது அழுத்தத்தைக் குவிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. “வங்கிகளுக்கு அதிக ஆபத்துகள்” மற்றும் “ரஷ்யாவின் இராணுவ தொழில்துறை தளம் அல்லது அமெரிக்க நிதி அமைப்பில் இருந்து துண்டிக்கப்படும் அபாயம் தொடர்பான வர்த்தகத்தில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள” ஊக்குவிக்கும் புதிய […]

ஆப்பிரிக்கா

வடகிழக்கு நைஜீரியாவில் விறகு சேகரிக்க சென்ற 200 பெண்கள் மாயம்!

  • March 7, 2024
  • 0 Comments

வடகிழக்கு நைஜீரியாவில் வன்முறையால் இடம்பெயர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் குறைந்தது 200 பேர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட் எல்லைக்கு அருகே விறகுகளைத் தேடிக்கொண்டிருந்தபோது அவர்கள் கடத்தப்பட்டதாக நைஜீரியாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது. கடத்தப்பட்டவர்களின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் 200 பேருக்கு மேல் இருக்கும் என்று  என்று நைஜீரியாவிற்கான ஐ.நா மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் மொஹமட் ஃபால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடந்து சில காலம் இருக்கும் என்றாலும் தற்போதுதான் […]

பொழுதுபோக்கு

“நான் இழந்துவிட்டேன்” நயன்தாராவின் பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

  • March 7, 2024
  • 0 Comments

நடிகை நயன்தாரா கோலிவுட்டின் டாப் நடிகையாக திகழ்கிறார். ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அவர் கடைசியாக அன்னபூரணி படத்தில் நடித்திருந்தார். இந்தச் சூழலில் அவர் இன்ஸ்டாகிராமில் போட்டிருக்கு பதிவு ஒன்று பல்வேறு கேள்விகளை ரசிகர்களிடையே எழுப்பியிருக்கிறது. அவர் துவண்டு போயிருந்த நேரம் கிடைத்த படம்தான் நானும் ரௌடிதான் மற்றும் அறம். இந்த இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின. குறிப்பாக நயனின் திறமையை வெளிச்சம் போட்டு காட்டியது. அறம் படம் வெளியானதிலிருந்து லேடி சூப்பர் ஸ்டார் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மில்லியன் கணக்கான பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கல்!

  • March 7, 2024
  • 0 Comments

ஜேர்மனி முழுவதும் மில்லியன் கணக்கான பயணிகள் இன்று (07.03) கடுமையான போக்குவரத்து சிக்கல்களை எதிர்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜேர்மன் விமான நிலைய ஊழியர்கள் இன்று பணிப்புறுக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமையால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதன்படி ரயில் ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாட்டில் உள்ள அனைத்து நீண்ட தூர ரயில்கள் மற்றும் பிராந்திய மற்றும் பயணிகள் ரயில்களில் சுமார் 80% ரத்து செய்யப்பட்டன. அதேபோல் ஜேர்மன் விமான நிறுவனமான லுஃப்தான்சாவின் தரை ஊழியர்கள் அதிகாலையில் வேலை செய்வதை […]

இலங்கை

பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் சாணக்கியன் எம்.பி மீது தாக்குதல் முயற்சி

  • March 7, 2024
  • 0 Comments

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன என்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என சாணக்கியன் எம்.பி சபையில் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இந்நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டதென […]

ஐரோப்பா

ஆறு ஐரோப்பிய நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய சீனா திட்டம்

ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய சீனா திட்டமிட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்து, அயர்லாந்து, ஹங்கேரி, ஆஸ்திரியா, பெல்ஜியம் மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு மார்ச் 14 முதல் விசா இல்லாத பயணத்தை சீனா வழங்கும் என்று வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம்

ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் : மூவர் பலி!

  • March 7, 2024
  • 0 Comments

தெற்கு ஏமனில் சரக்குக் கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள கடற்பரப்பில், கிளர்ச்சியாளர்கள் பார்படாஸ் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் கப்பலில் இருந்த மூன்று பணியாளர்கள் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயம் அடைந்துள்ளனர். காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் […]

உலகம்

தன்சானியாவில் வாகன விபத்தில் இலங்கையர் இருவருக்கு நேர்ந்த கதி!

  • March 7, 2024
  • 0 Comments

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் செவ்வாய்க்கிழமை (மார்ச் 05) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச தகவ்ல்கள் வெளியிட்டுள்ளன. இலங்கையர்களான இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன. சம்பவத்திஒல் உயிரிழந்தவர்களில் ஒருவர் காலி கொட்டுகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும், மற்றையவர் காலி மகுலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் […]