செய்தி தமிழ்நாடு

மறைந்த கேப்டனின் நினைவிடத்தில் நோன்புக் கஞ்சி வழங்க திட்டம்

  • March 12, 2024
  • 0 Comments

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரமலான் தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ரமலான் நோன்பு நாட்களை முன்னிட்டு, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் அனைவருக்கும், மாலை 6 மணிக்கு மேல் தொழுகை நேரம் முடிந்த […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் சிறுமி துஷ்பிரயோகம்!! நீதிமன்றம் கொடுத்த தண்டனை

  • March 12, 2024
  • 0 Comments

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில்  கடந்த 2011ம் ஆண்டு பதினாறு வயதிற்கும் குறைந்த  தனது பெறாமகளை  பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய சிறிய தந்தைக்கு பதின்மூன்று வருடங்களுக்குப்பின்னர் செவ்வாய்க்கிழமை (12) கிளிநொச்சி மேல் நீதிமன்றம்  பன்னிரெண்டு ஆண்டுக் கால கடூழிய சிறைத்தண்டனை வழங்கி  தீர்ப்பளித்துள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பகுதியில் கடந்த 2011 ஆண்டு யூன் மாதம் 30ம் திகதி மற்றும் 2012ம் ஆண்டு யூலை ஆகிய காலப்பகுதிகளில்  பதினாறு வயதிற்கும் குறைவான தனது பெறாமகளை  […]

இந்தியா செய்தி

அக்னி-5 ஏவுகணை வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய பெண் விஞ்ஞானி

  • March 12, 2024
  • 0 Comments

இந்தியா நேற்று பல போர்க்கப்பல்களுடன் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது, அந்த மகத்தான சாதனையை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார், அதற்கு ‘திவ்யாஸ்திரம்’ என்று பெயரிட்டார். ஹைதராபாத்தில் உள்ள நாட்டின் ஏவுகணை வளாகத்தைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி ஷீனா ராணி, 1999 ஆம் ஆண்டு முதல் அக்னி ஏவுகணை அமைப்புகளில் பணிபுரிந்து வருகிறார். இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சியில் இந்தியாவின் சமீபத்திய ஷேரோ மற்றும் இப்போது ‘திவ்ய புத்ரி’ திருமதி ராணியின் இருபத்தைந்தாவது ஆண்டுக்கான மகுடம் என பலர் […]

ஐரோப்பா செய்தி

புகைப்பட சர்ச்சை!! மன்னிப்பு கோரினார் பிரித்தானிய இளவரசி

  • March 12, 2024
  • 0 Comments

எடிட் செய்யப்பட்ட புகைப்படம் வெளியிட்டமை தொடர்பில் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்  மன்னிப்பு கோரியுள்ளார். இங்கிலாந்தில் அன்னையர் தினமாக கொண்டாடப்படும் கடந்த 10ம் திகதி தனது 3 குழந்தைகளான இளவரசர்கள் ஜார்ஜ் (10), லூயிஸ் (5), இளவரசி சார்லோட் (8) ஆகியோருடன் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் சிரித்தபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டது. இதில் வேல்ஸ் இளவரசர் வில்லியம் இல்லாததும், கேட் மிடில்டன் விரலில் திருமண மோதிரம் இல்லாததும் பல குழப்பங்களை ஏற்படுத்தியது. […]

ஐரோப்பா செய்தி

சூரிச் விமான நிலையம் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக அறிவிப்பு

  • March 12, 2024
  • 0 Comments

சூரிச் விமான நிலையம் மீண்டும் ஐரோப்பாவின் சிறந்த விமான நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆறாவது ஆண்டாக, சூரிச் விமான நிலையம் ஐரோப்பாவிலேயே ‘சிறந்தது’ என்று அதன் நிர்வாகம் நேற்று திங்களன்று அறிவித்தது. விமான நிலைய ஆபரேட்டர்களின் சர்வதேச கிளை அமைப்பான ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் வேர்ல்ட் என்ற அமைப்பு ஆண்டுதோறும் வழங்கும் A S Q விருது, வாடிக்கையாளர் கணக்கெடுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. தரவரிசையில் உள்கட்டமைப்பு, பாதுகாப்பு கட்டுப்பாடுகள், கேட்டரிங் விருப்பங்கள் போன்ற 34 வெவ்வேறு பிரிவுகள் […]

இலங்கை செய்தி

யாழ்ப்பாணத்தில் இளைஞர் கடத்தி கொலை!!! கிளிநொச்சியில் பதுங்கிருந்த நால்வர் கைது

  • March 12, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நால்வரும் கிளிநொச்சியில் பதுங்கிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ் – வட்டுக்கோட்டை, பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த தம்பதியரை கடத்திச்சென்றவர்கள் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கணவரை கொலை செய்துள்ளனர். கணவருடன் ஏற்கனவே கருத்து முரண்பாடு கொண்டிருந்த  சிலர் நேற்றிரவு அவா்கள் பயணித்த மோட்டார் சைக்கிளை  காரில்   பின்தொடர்ந்துள்ளனர். இதனையறிந்து, மோட்டார் சைக்கிளை திருப்பி வேறு திசையில் […]

இலங்கை செய்தி

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றாமல் பயணித்த அரச பேருந்து

  • March 12, 2024
  • 0 Comments

கிளிநொச்சி முகமாலை பகுதியில் பாடசாலை மாணவர்களை பஸ்களில் ஏற்றாது பயணிப்பது தொடர்பில் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டு வந்தனர்.குறித்த பிரச்சினை நீண்ட காலமாக காணப்படுகிறது.இதனால் பாடசாலைக்கு உரிய நேரத்துக்கு போக முடியாத நிலை காணப்படுவதாகவும், சில சமயங்களில் பாடசாலைக்கு செல்லாமல் விடும் சூழலும் காணப்படுவதாக கவலை தெரிவிக்கின்றனர். இன்று செவ்வாய்க்கிழமை 7.40 வரை எந்தவொரு பஸ்ஸும் மாணவர்களை ஏற்றாது பயணித்துள்ளது. இதனை அடுத்து பெற்றோர் ஒருவர் தனது மோட்டார் சைக்கிளை பஸ்ஸூக்கு குறுக்காக நிறுத்தி மாணவர்களை ஏற்றி […]

உலகம் செய்தி

ரஷ்ய – உக்ரைன் போர் குறித்து ஹங்கேரி ஜனாதிபதியின் கணிப்பு

  • March 12, 2024
  • 0 Comments

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றால், ரஷ்ய – உக்ரைன் போர் 24 மணி நேரத்தில் முடிவுக்கு வரும் என ஹங்கேரி அதிபர் விக்டர் ஓர்பன் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கிய பணம் மற்றும் ஆயுதங்களை தடை செய்து டொனால்ட் டிரம்ப் அந்த நடவடிக்கையை மேற்கொள்வார் என அவர் குறிப்பிட்டுள்ளார். காங்கிரசில் பெரும்பான்மை பலம் கொண்ட முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் குடியரசு கட்சி உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்காததால், உக்ரைனுக்கு வழங்க அமெரிக்க […]

உலகம் செய்தி

சீனாவின் வாகன ஏற்றுமதியில் வளர்ச்சி

  • March 12, 2024
  • 0 Comments

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் சீனாவின் வாகன ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சீன ஆட்டோமொபைல் தொழில் சங்கம் நேற்று (11) இதனைக் குறிப்பிட்டுள்ளது. வெளியிட்ட தரவுகளின்படி, சீனாவின் வாகன ஏற்றுமதி ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் மொத்தம் 822,000 வாகனங்கள், கடந்த ஆண்டை விட 30.5% அதிகரித்துள்ளது. இது 182,000 புதிய ஆற்றல் வாகனங்களையும் உள்ளடக்கியது, இது கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 7.5% அதிகமாகும். மேலும், […]

உலகம் செய்தி

காஸாவில் பட்டினியால் வாடும் சுகாதார ஊழியர்கள்

  • March 12, 2024
  • 0 Comments

இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸா பகுதியில் வாழும் பலஸ்தீன மக்கள் எதிர்நோக்கும் மனிதாபிமான பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காஸா பகுதி முழுவதும் பட்டினி பரவி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. காஸா பகுதியில் வசிப்பவர்கள் உதவி மற்றும் சமைத்த உணவைப் பெற நீண்ட வரிசையில் காத்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சில நீண்ட வரிசையில் குழந்தைகள் நிரம்பியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையில், காஸாபகுதியில் உள்ள மீதமுள்ள மருத்துவமனைகளில் […]