புதுச்சேரி சிறுமி படுகொலை: கைதான இருருக்கும் நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் கைதான விவேகானந்தன், கருணாஸ் இருவரையும் மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விவேகானந்தன், கருணாஸ் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியபோது சிறுமி உயிரிழந்ததால், சடலத்தை கால்வாயில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்தனர். கடந்த […]













