ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரபல சுப்பர் மார்க்கெட் வெளியிட்ட அறிவிப்பு – மகிழ்ச்சியில் ஊழியர்கள்

பிரித்தானியாவில் உள்ள ஆல்டி சுப்பர் மார்க்கெட் தனது இரண்டாவது ஊதிய உயர்வை அறிவித்துள்ளது.

சூப்பர் மார்க்கெட்கள் ஊழியர்களுக்காக அதிக குறைந்தபட்ச ஊதியத்தை வழங்குவதற்கு சுப்பர் மார்க்கெட் தயாராகி வருகின்றது.

இந்த அதிகரிப்பு என்பது ஆல்டியில் உள்ள கடை ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மணிநேர கட்டணம் ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் 12.40 பவுண்டாக இருக்கும்.

இந்த மாற்றங்கள் 28,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பயனளிக்கும்.

கட்டாய தேசிய வாழ்க்கை ஊதியம் ஏப்ரல் மாதத்தில் ஒரு மணி நேரத்திற்கு 11.44 பவுண்டாக உயரும் மற்றும் முதல் முறையாக அது 21 மற்றும் 22 வயதுடையவர்களையும் உள்ளடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆல்டி இப்போது 1,000 க்கும் மேற்பட்ட கிளைகள் மற்றும் 45,000 ஊழியர்களுடன் பிரஇன் நான்காவது பெரிய சுப்பர் மார்க்கெட் நிறுவனமாகும்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்