சேலம்- கொலைக்கு வித்திட்ட TV நிகழ்ச்சி… சொத்துக்காக தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!
சேலம் அருகே, தனியார் TV நிகழ்ச்சியில் பங்கேற்று குடும்பப் பிரச்சினையை பேசிய தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (67). கட்டிட வேலை செய்துவந்த இவருக்கு மாரியம்மாள் (65) என்ற மனைவியும், ராஜா (40) என்ற மகனும், சந்திரா (35) என்ற மகளும் உள்ளனர். ராஜாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். […]













