மட்டக்களப்பு- பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு வாவியின் , பட்டிருப்பு பாலத்தின் கீழிருந்து ஆண் ஒருவரின் சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர் . பட்டிருப்பு பாலம் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை (19) மாலை துவிச்சக்கரவண்டி ஒன்றும் காலணியும் கிடப்பதாக அப்பகுதியில் பயணித்தவர்கள் தெரிவித்துள்ள நிலையிலேயே குறித்த சடலம் சனிக்கிழமை (20) மீட்கப்பட்டுள்ளது . பட்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யோகநாதன் கிதுசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய இஸ்த்தலத்திற்கு விரைந்த […]













