விளையாட்டு

IPL – இன்றைய ஆட்டம் தொடர்பான அறிவித்தல்!

  • April 1, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று (31) Lucknow Super Giants – Delhi Capitals அணிகள் மோதுகின்றன. இந்திய நேரப்படி போட்டி இன்றிரவு 7 மணிக்கு ஆரம்பமாகும். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ரிஷப் பந்த் தலைமையில் களமிறங்குகிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அக்சர் படேல் தலைமையில் போட்டியில் பங்கேற்கின்றது.

பொழுதுபோக்கு

பிரபுதேவா குடும்பத்துடன் நடிகை ரம்பா!

  • April 1, 2026
  • 0 Comments

நடிகை ரம்பா, பிரபுதேவாவின் வீட்டிற்கு சென்று மனைவி மற்றும் மகளை சந்தித்து பேசியுள்ளார். நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவா ஹிமானி சிங் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகிள பெண் குழந்தை உள்ள நிலையில், அவர்களுடன் இருக்கும் அழகிய படத்தினை ரம்பா பகிர்ந்துள்ளார். இந்த படங்கள் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகின்றன.

உலகம் செய்தி

ஈரானில் 65 உளவாளிகள் கைது!

  • April 1, 2026
  • 0 Comments

ஈரான் மத்திய மார்க்காசி மாகாணத்தில் Markazi province எதிரி நாடுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் கூறப்படும் 65 பேர் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிடிபட்டவர்கள் பயங்கரவாதக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்றும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு ரகசியத் தகவல்களை வழங்கிய உளவுப் பிரிவினராகச் செயல்பட்டதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகக் கருதப்படும் நபர்களைக் கண்டறிந்து தண்டிப்பதில் ஈரான் அரசு அதிகத் தீவிரம் காட்டி வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கைகள் […]

உலகம் செய்தி

கத்தாரில் எரிபொருள் கப்பல்மீது ஏவுகணைத் தாக்குதல்!

  • April 1, 2026
  • 0 Comments

கத்தார் எனர்ஜி நிறுவனம் வாடகைக்கு எடுத்த “Aqua 1” என்ற எரிபொருள் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் இன்று (01) அதிகாலை கத்தாரின் வடக்கு கடல் எல்லைப் பகுதியில் நிஇடம்பெற்றுள்ளது. இந்தத் தாக்குதலில் கப்பலில் இருந்த ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்தினால் கடலில் கசிவு ஏற்பட்டு சுற்றுச்சூழல் பாதிப்புகள் எதுவும் உண்டாகவில்லை என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

உலகம் செய்தி

இஸ்ரேலின் இனவெறிச் செயல்: அமெரிக்க செனட்டர் கொதிப்பு!

  • April 1, 2026
  • 0 Comments

இஸ்ரேலுக்கு வழங்கப்படும் தடையற்ற நிதி உதவிக்கு அமெரிக்க செனட்டர் கிறிஸ் வான் ஹொல்லன் Senator Chris Van Hollen தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் வசிக்கும் பாலஸ்தீனியர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கும் இஸ்ரேலிய அரசின் புதிய சட்டத்தை அவர் மிக மோசமான இனவெறி செயல் என்று விமர்சித்துள்ளார். ஒரே குற்றத்திற்காக யூதர்களுக்கு ஒரு நீதியும், பாலஸ்தீனியர்களுக்கு ஒரு நீதியும் கடைபிடிக்கப்படுவதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பாரபட்சமான கொள்கைகளைக் கொண்ட ஒரு நாட்டிற்கு அமெரிக்கா […]

இலங்கை செய்தி

” வடக்கு ஆளுநரை நேரடியாகவே பாடசாலைக்கு வரவைத்த மாணவனின் பெறுபேறு”

  • April 1, 2026
  • 0 Comments

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், கணிதப் பிரிவில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுச் சாதனை படைத்த கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தெ.திருக்குமரனை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் நேரில் சந்தித்துத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இன்று (01.04.2026) கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்கு நேரடியாகப் பயணம் செய்த ஆளுநர் மற்றும் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன் ஆகியோரைப் பாடசாலை அதிபர் திருமதி ஐ.நிமல்ராஜ் வரவேற்றார். இப்பாடசாலையைச் சேர்ந்த மாணவன் தெ.திருக்குமரன் கணிதப் […]

உலகம் செய்தி

ஹார்முஸ் நீரிணை: புதிய விதிகளை பின்பற்றுமாறு ஈரான் வலியுறுத்து!

  • April 1, 2026
  • 0 Comments

ஹார்முஸ் நீரிணை தொடர்பான புதிய விதிகளை ஈரானிய நாடாளுமன்றக் குழுவின் தலைவர் எப்ராஹிம் அசிசி Ebrahim Azizi அறிவித்துள்ளார். ஈரானின் புரட்சிக்குப் பிந்தைய நீண்டகாலப் பொறுமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும், இனி அந்த கடல்வழியைப் பயன்படுத்துவோர் ஈரானின் புதிய சட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். கடல்சார் விதிகளில் ஈரான் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், ட்ரம்ப் எதிர்பார்த்த ஆட்சி மாற்றம் இங்குதான் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக, ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடக்கும் கப்பல்களுக்கு […]

இலங்கை

ஆழ்கடலில் சிக்கிய படகில் 300 கிலோ ஹெரோயின்!

  • April 1, 2026
  • 0 Comments

பேருவளைக்கு அப்பால் ஆழ்கடல் பகுதியில் பலநாள் மீன்பிடிப் படகிலிருந்த 300 கிலோகிராமுக்கும் அதிக ஹெரோயின் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையினரால் இன்று (01) காலை மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் இப் படகு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த படகானது திக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளதுடன்,  சோதனைகளின் போது படகிலிருந்த 298 உரப் பைகளில் இப் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும்,  அதிலிருந்த 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இப் போதைப்பொருளானது, சுமார் 6000 மில்லியன் ரூபா பெறுமதி […]

இலங்கை செய்தி

அமைச்சர் குமார ஜயக்கொடிக்கு ‘அரசியல் பலப்பரீட்சை’! ஆளுங்கட்சி கூறுவது என்ன?

  • April 1, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியின் அமைச்சர் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ Kumara Jayakody தெரிவித்தார். எரிசக்தி அமைச்சர்மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. நிலக்கரி மோசடி உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாக் கொண்டு அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. இந்நிலையிலேயே அமைச்சரவைப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். “ குமார ஜயகொடி தற்போதைய பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார். அரச உர […]

இலங்கை

8,300 மாணவர்களுக்கு 3 ‘A’ சித்திகள்!

  • April 1, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். அதன்படி, இவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர். இதேவேளை, 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று (31) நள்ளிரவு உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.