செய்தி தமிழ்நாடு

விஜய் மனதில் பாஜக தான் – குஷ்பு

தமிழ்நாட்டை போன்று புதுச்சேரியில் தவெக தனித்து தேர்தலை சந்திக்கிறது. இதற்காக தவெக தலைவர் விஜய் நேற்று அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். அதன்படி மணவெளி தொகுதி தவெக வேட்பாளர் ராமுவும், பாஜக சார்பில் செல்வமும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், அந்தத் தொகுதியில் ராமுக்கு ஆதரவு திரட்டி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், “மணவெளி தொகுதியில் செல்வத்துக்கு ஆதரவு கொடுங்கள்” என பேசினார். இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சித் தலைவர் குஷ்பு, அங்கு ரோடு ஷோவும் நடத்தினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய குஷ்பு, “விஜய் நேற்றுதான் அரசியலுக்கு வந்துள்ளார். அவரை விட்டுவிடுங்கள், அவரை பற்றி பேச வேண்டாம். அவர் மனதில் பாஜக உள்ளதால்தான் புதுவை பிரச்சாரத்தின் போது அவர் கட்சி வேட்பாளருக்கு பதிலாக பாஜக வேட்பாளர் பெயரை குறிப்பிட்டுள்ளார்” எனத் தெரிவித்தார்.

30 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட புதுச்சேரிக்கு எதிர்வரும் ஏப்ரல் 9 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி