ஐரோப்பா செய்தி

அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சு வார்த்தை – பிரித்தானியா நேரடியாக பங்கேற்றதா?

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா நேரடியாக ஈடுபடவில்லையென அமைச்சர் சாரா ஜோன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார். ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். எவ்வாறாயினும் ஹார்முஸ் நீரிணை பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணவும், நிலையான போர்நிறுத்தம் மற்றும் உடன்படிக்கை ஏற்படவும் பிரித்தானியா தனது முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும், அந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியா நேரடியாக ஈடுபடவில்லை என்றும், இதில் பாகிஸ்தான் முக்கிய பங்காற்றி வருவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், […]

இலங்கை செய்தி

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு

  • April 8, 2026
  • 0 Comments

புனரமைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையம் மக்கள் பாவனைக்கு இன்று திறந்து வைக்கப்பட்டது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் இந்த நிகழ்வு இடம்பெற்றது. ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட இந்தத் திட்டம், பொதுமக்களுக்கு அதிக வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமொன்றை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டது. இதன் முதற்கட்டத்தின் கீழ், பேருந்து நிலையக் கட்டடங்களைப் […]

இலங்கை செய்தி

எம்.பிகளுக்கு இத்தனை சலுகைகளா? சம்பளை பட்டியலை வெளியிட்ட அர்ச்சுனா

  • April 8, 2026
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறும் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்ற நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தனது 2026 மார்ச் மாதத்திற்கான சம்பள பட்டியலை பகிரங்கப்படுத்தியுள்ளார். இதன்படி, மார்ச் மாதத்திற்கான அவரது மொத்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் 415,169.93 ரூபாவாகும். இதிலிருந்து வருமான வரி, வீட்டு வாடகை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணங்கள் என மொத்தம் 19,308.71 ரூபா கழிக்கப்பட்ட நிலையில், அவரது வங்கி கணக்கில் 395,861.22 ரூபா தேறிய சம்பளமாக […]

உலகம் கல்வி

கடும் அழுத்தத்தில் ஈரான் போர் நிறுத்தத்தை ஏற்றது – அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர்

  • April 8, 2026
  • 0 Comments

ஈரான், மிகுந்த அழுத்தத்தின் கீழ் போர் நிறுத்தத்தை ஏற்றுக்கொண்டதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார். வொஷிங்டனின் நிபந்தனைகளை ஈரான் மறுத்திருந்தால், அதன் மின் உற்பத்தி நிலையங்கள், பாலங்கள் மற்றும் எண்ணெய், எரிசக்தி உட்கட்டமைப்புகள் அடுத்த தாக்குதலின் இலக்குகளாக இருந்திருக்கும் என்று அவர் எச்சரித்தார். அத்தகைய தாக்குதல்கள் நடைபெற்றிருந்தால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஈரானுக்கு பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதனால், ஒரு ஒப்பந்தமே சிறந்தது என்பதை ஈரான் உணர்ந்ததாகவும் கூறினார். மேலும், “ […]

இந்தியா செய்தி

போர் நிறுத்தத்தை வரவேற்ற இந்தியா

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா – ஈரான் இடையே எட்டப்பட்டுள்ள தற்காலிக போர் நிறுத்தத்தை இந்தியா வரவேற்றுள்ளது. இந்த நடவடிக்கை மேற்கு ஆசியாவில் நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டு வர பதற்றத்தைத் தணித்தல், பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திர அணுகுமுறை ஆகியவை இன்றியமையாதவையென்றும் இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது, “இந்த மோதல் ஏற்கெனவே மக்களுக்கு அளவற்ற துயரத்தை ஏற்படுத்திவிட்டது. அத்துடன், உலகளாவிய […]

ஐரோப்பா செய்தி

சரிவுப் பாதையில் பிரித்தானியாவின் வீட்டு விலைகள்

  • April 8, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் இடம்பெற்ற போரின் விளைவாக, அடமானக் கடன் வட்டி விகிதங்கள் உயர்ந்ததால் வீடுகள் வாங்கும் தேவை குறைந்துள்ளது. இதன் காரணமாக, மார்ச் மாதத்தில் பிரித்தானியாவின் சராசரி வீட்டு விலைகள் 0.5% வீழ்ச்சியடைந்ததாக ஹாலிஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது,பிரித்தானியாவில் சராசரி சொத்து விலை £299,677 ஆக இருப்பதுடன், ஆண்டு வளர்ச்சியும் மந்தமடைந்துள்ளது. இதற்கு முன்பு, பெப்ரவரி மாதத்தில் 0.3% உயர்வு பதிவாகியிருந்த நிலையில், இந்தச் சரிவு அந்த உயர்வை மாற்றியுள்ளது. போர் காரணமாக எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ளன. […]

வாழ்வியல்

நிதானமே பிரதானம்: 2026-ல் உலகைக் கவரும் ‘Slowcations’ வாழ்க்கை முறை!

  • April 8, 2026
  • 0 Comments

முன்பெல்லாம் சுற்றுலா சென்றால் ஒரே வாரத்தில் 10 இடங்களைப் பார்த்துவிட்டு, இறுதியில் உடலும் மனமும் களைப்படைந்து வீடு திரும்புவோம். ஆனால், 2026-ல் மக்கள்அளவை விட தரம் (‘Quality over Quantity’) என்ற கொள்கையைத் தேர்ந்தெடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட ஊரில் குறைந்தது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் தங்கி, அங்கேயே வாழ்வதுதான் இந்த ‘Slowcations’. மக்களின் இந்த மாற்றத்திற்கான முக்கிய 4 காரணங்கள் 1. மனநலத்திற்கே முதல் முன்னுரிமை (Mental Reset) பரபரப்பான வேலைப்பளுவில் இருந்து தப்பிக்க, […]

ஐரோப்பா செய்தி

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற பிரித்தானிய எதிர்கட்சி

  • April 8, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூத்த டோரி தலைவர் சர் ஜேம்ஸ் கிளெவர்லி வரவேற்றுள்ளார். ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். “போர் நிறுத்தம் சிறந்தது என்றாலும் இது தற்காலிகமான வாய்ப்பு என கூறிய அவர் இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்” என்றும் வலியுறுத்தினார். இதேவேளை, நீடித்த அமைதி உருவாக வேண்டுமெனில், ஈரான் தனது நடத்தையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் மூத்த டோரி தலைவர் […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான ஆதரவு குறைந்தது

  • April 8, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் யூகோவ் (YouGov) நடத்திய புதிய கருத்துக் கணிப்பில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்களுக்கான ஆதரவு குறைந்து வருகின்றமை தெரியவந்துள்ளது முன்னர் இளநிலை வைத்தியர்கள் என அழைக்கப்பட்ட பயிற்சி மருத்துவர்கள், சம்பளம் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பாக கடந்த மூன்று ஆண்டுகளில் தங்களின் 15 ஆவது வேலைநிறுத்தத்தை இந்த வாரம் முன்னெடுத்தனர். 2023 இல் பயிற்சி மருத்துவர்கள் முதன்முதலில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டபோது, ​​கருத்துக் கணிப்புகளின்படி, அவர்களுக்கு 59% மக்களின் ஆதரவு இருந்தது. அந்த எண்ணிக்கை தற்போதுbb வெறும் 37 […]

உலகம் செய்தி

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்!

  • April 8, 2026
  • 0 Comments

மீண்டெழுவதில் ஈரான் தீவிரம்: தெஹ்ரானில் பணி ஆரம்பம்! ஈரான் தலைநகர் தெஹ்ரானில் தூய்மைப்பணி மற்றும் சீரமைப்பு நடவடிக்கை என்பன முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படையுடன் தொடர்புடைய Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர்க்கால சிதைவுகளை அகற்றி வீதிகளை மீண்டும் திறக்கும் பணிகள் இடம்பெற்றுவருவதாகக் கூறப்பட்டுள்ளது. நகரின் சில பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்காகத் தரையைச் சமன்படுத்தும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாவட்ட மேயர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நகரின் இயல்பு […]