இலங்கை

அரச வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில்!

  • April 9, 2026
  • 0 Comments

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (9) காலை 8 மணி முதல் நாடு தழுவிய ரீதியில் 48 மணிநேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. உள்ளகப் பயிற்சி பெற்றவர்களுக்கான வைத்திய நியமனங்கள் அறிவிக்கப்பட்ட விதத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 436 புதிய வைத்திய அதிகாரிகளுக்கான புதிய சேவை இடங்கள், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சுக்களினால் நேற்று(8) அறிவிக்கப்பட்டிருந்தன. இந்த நியமனங்கள் வழங்கப்பட்ட முறையில் காணப்படும் முரண்பாடுகள் மற்றும் அதிருப்தி […]

இலங்கை

USB பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை!

  • April 9, 2026
  • 0 Comments

இலங்கையில் கடந்த 2026ஆம் ஆண்டில் மாத்திரம் சுமார் 1.5 கோடி (14,960,244) உள்ளூர் Malware பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சர்வதேச சைபர் பாதுகாப்பு நிறுவனமான Kaspersky தெரிவித்துள்ளது. இணையம் ஊடாகப் பரவும் வைரஸ்களை விட, USB Drives, குறுந்தகடுகள் (DVDs) போன்ற சாதனங்கள் மூலமாகவே 37.4 சதவீதமான தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அதாவது, இலங்கையில் உள்ள கணினிப் பயனாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறான சாதனங்கள் மூலம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர். உள்ளூர் Malware அச்சுறுத்தல்களுக்கு ஆளாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை […]

உலகம் செய்தி

போர் நிறுத்த பொறிமுறைக்குள் லெபனான் இல்லை: ட்ரம்ப் கைவிரிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

இருவார கால போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump தெரிவித்துள்ளார். லெபனானிலுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரை இலக்குவைத்து இஸ்ரேல் உக்கிர தாக்குதலை நடத்தியுள்ளது. இதுவரையில் இல்லாத அளவுக்கு இன்று கோரத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு ஈரான் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போர் விதிமீறல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பினர் தனியாகக் கையாளப்படுவார்கள் எனவும் […]

உலகம் செய்தி

இஸ்ரேல் உக்கிர தாக்குதல்: லெபனானில் 89 பேர் பலி! ஈரான் கடும் எச்சரிக்கை!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனானில் பல பகுதிகளிலும் இஸ்ரேல் இன்று நடத்திய உக்கிர தாக்குதலில் 89 பேர் பலியாகியுள்ளனர். 700 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் இருவார கால போர் நிறுத்தம் அமுலில் உள்ளது. இது தொடர்பில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இஸ்ரேலும் இதற்கு இணங்கியுள்ளது. குறித்த போர் நிறுத்தம் லெபனானுக்கும் பொருந்தும் என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போர் நிறுத்தம் லெபனான் விவகாரத்தில் தொடர்புபடாது எனக் குறிப்பிட்டு, […]

இலங்கை செய்தி

வேலை வாய்ப்பு எனும் போர்வையில் கொழும்பில் பல மில்லியன் மோசடி

  • April 8, 2026
  • 0 Comments

அல்பேனியா மற்றும் கனடாவில் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்து, ரூ. 10 மில்லியனுக்கும் அதிகமான தொகையை மோசடி செய்ததாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரை, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் (SLBFE) சிறப்புப் புலனாய்வுப் பிரிவு கைது செய்துள்ளது. அந்தப் பெண், மஹரகமவில் “குளோபல் எடுகேர் கன்சல்டன்சி” என்ற பெயரில், மாணவர் விசா சேவை வழங்குபவர் போல் நடித்து, வெளிநாட்டு வேலைகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதியளித்து தனிநபர்களிடமிருந்து பணத்தை வசூலித்து வந்துள்ளார். பெறப்பட்ட […]

உலகம் செய்தி

ஈரானுக்கு ஆயுத உதவி வழங்கும் நாடுகளுக்கு 50% வரி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்

  • April 8, 2026
  • 0 Comments

ஈரானுக்கு இராணுவ ஆதரவு வழங்கும் எந்த நாடாக இருந்தாலும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 50% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வரும் என்றும், எந்தவித விதிவிலக்குகளும் வழங்கப்படமாட்டாது என்றும் அவர் கூறினார். இதனுடன், ஈரானில் “ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். எதிர்காலத்தில் அமெரிக்கா, ஈரானுடன் நெருக்கமாக இணைந்து செயல்படத் தயாராக […]

உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க சர்வதேச உதவியை நாடுகிறது லெபனான்!

  • April 8, 2026
  • 0 Comments

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டுப் பிரதமர் Nawaf Salam சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார். தலைநகர் பெய்ரூட் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் பயங்கரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கை தற்போது […]

இலங்கை செய்தி

“நம்பிக்கையில்லாப் பிரேரணை”- அரசின் நிலைப்பாடு அறிவிப்பு!

  • April 8, 2026
  • 0 Comments

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு Kumara Jayakody எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்று அமைச்சர் விஜித ஹேரத் Vijitha Herath தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சரவை பதில் பேச்சாளராக விஜித ஹேரத் பங்கேற்றிருந்தார். எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 10 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கத்தின் […]

இலங்கை செய்தி

இலங்கையின் சுற்றுலாத்துறை 19.7 வீதத்தால் வீழ்ச்சி!

  • April 8, 2026
  • 0 Comments

இலங்கையின் சுற்றுலாத்துறை 2026 மார்ச் மாதம் 19.7 சதவீத வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசியாவில் நிலவிய போர் பதற்றம் காரணமாகவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்த பயணிகள், போர்ச்சூழலால் தமது பயணத்தை இரத்து செய்தனர். இதனால் சுற்றுலாத்துறையில் முதல் காலாண்டில் இலங்கை நிர்ணயித்த இலக்கை அடைய முடியாமல்போயுள்ளது. வான்வெளி மூடல்கள் மற்றும் விமான ரத்துகளாலேயே இந்நிலை ஏற்பட்டது. 2018 மார்ச் மாதம் இலங்கைக்கு 233,382 […]

இலங்கை செய்தி

“உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே முதன்மை நோக்கம் “

  • April 8, 2026
  • 0 Comments

  உள்நாட்டு தொழிற்துறையினரை வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், அரசாங்கத்திற்குத் தேவையான விநியோகங்களை மேற்கொள்வதில் எதிர்காலத்தில் உள்நாட்டு வர்த்தகர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகளை விரிவுபடுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். இலங்கை ஐக்கிய வியாபாரக் கூட்டமைப்புடன் (CUBA – Ceylon United Business Alliance) இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக உள்நாட்டுத் தொழில்துறை எதிர்நோக்கியுள்ள சவால்கள் மற்றும் […]