ஐரோப்பா செய்தி

அமெரிக்க – ஈரான் போர் நிறுத்தத்தை வரவேற்ற பிரித்தானிய எதிர்கட்சி

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மூத்த டோரி தலைவர் சர் ஜேம்ஸ் கிளெவர்லி வரவேற்றுள்ளார்.

ஸ்கை நியூஸுக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“போர் நிறுத்தம் சிறந்தது என்றாலும் இது தற்காலிகமான வாய்ப்பு என கூறிய அவர் இந்த நேரத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்வது அவசியம்” என்றும் வலியுறுத்தினார்.

இதேவேளை, நீடித்த அமைதி உருவாக வேண்டுமெனில், ஈரான் தனது நடத்தையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்றும் மூத்த டோரி தலைவர் சர் ஜேம்ஸ் கிளெவர்லி வலியுறுத்தினார்.

அணு ஆயுத முயற்சிகளைத் தடுப்பதும், சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதை நிறுத்துவதும் முக்கியம் எனவும் குறிப்பிட்டார்.

மேலும், உலக வர்த்தகத்திற்கு முக்கியமான ஹார்மூஸ் நீரிணையில் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும், அமைதிக்கான வாய்ப்புகளை ஈரான் பலமுறை கடந்த காலத்தில் தவறவிட்டுள்ளதாக சர் ஜேம்ஸ் கிளெவர்லி சுட்டிக்காட்டினார்.

“இந்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைய வேண்டும் என்று நம்புகிறேன். ஆனால் அது நடக்கும் என்று உறுதியாகச் சொல்வது மிகவும் கடினம்” என்றும் அவர் கூறினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி