உலகம் செய்தி

இஸ்ரேலின் தாக்குதலை தடுக்க சர்வதேச உதவியை நாடுகிறது லெபனான்!

லெபனான்மீது இஸ்ரேல் நடத்தி வரும் தீவிரமான வான்வழித் தாக்குதல்களைத் தடுக்க அந்நாட்டுப் பிரதமர் Nawaf Salam சர்வதேச நாடுகளின் உதவியைக் கோரியுள்ளார்.

தலைநகர் பெய்ரூட் உட்பட மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இஸ்ரேலிய ராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதல்கள் பயங்கரமானவை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தப் போரினால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதோடு, இஸ்ரேல் சர்வதேச சட்டங்களை மதிக்காமல் செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் எடுத்து வரும் இந்த ராணுவ நடவடிக்கை தற்போது மிகப்பெரிய அளவை எட்டியுள்ளதாக ராணுவத் தரப்பும் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே, லெபனானின் நண்பர்களாக இருக்கும் நாடுகள் இந்த ஆக்கிரமிப்பை நிறுத்த அனைத்து வழிகளிலும் முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஈரான்மீதான தாக்குதல்களை இஸ்ரேல், அமெரிக்கா என்பன நிறுத்தி இருந்தாலும், லெபனான்மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றது.

லெபனான்மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என ஈரான் தரப்பில் வலியுறுத்தப்பட்டுவந்தாலும் அதனை இஸ்ரேல் ஏற்பதாக இல்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி