2026 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டமன்ற தேர்தல் ஆரம்பம்!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தல் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று நடைபெறவுள்ளது.
தமிழகத்தில் 5367 கோடி மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களில் 2.77 கோடி ஆண்களும், 2.89 கோடி பெண்களும் அடங்குவர்.
இம்முறை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. இதனால் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவராவார்.
அத்துடன் மாநிலம் முழுவதும் 75,032 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உள்ளேயும், வெளியேயும் சி.சி.டி.வி. வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
மேலும், வாக்குப்பதிவை நேரடியாக கண்காணிக்க 3 வகை கட்டுப்பாட்டு அறைகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது. அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அதிகாரி ஆகியோரின் கட்டுப்பாட்டில் வரும் வகையில் அவை அமைகப்பட்டுள்ளது.
அதேநேரம் தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமார் 75 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் 3,022 இடங்களில் உள்ள 5,938 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தெரியவந்துள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.




