பௌத்த மயமாக்கலுக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்!
தமிழர் தாயகமான வடக்கு,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் இதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருந்தது.
போராட்டத்தில் பங்கேற்றோர், பௌத்தமயமாக்கலை வன்மையாகக் கண்டித்தனர்.
அத்துடன், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.





