ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் 22 பிரித்தானியர் நாடு திரும்ப ஏற்பாடு!
ஹன்டா வைரஸ் பரவலுக்கு மத்தியில் எம்.வி. ஹோண்டியஸ் கப்பலில் உள்ள 22 பிரித்தானியர் நாளைய தினம் மீளவும் இங்கிலாந்திற்கு திரும்பவுள்ளனர்.
கப்பலில் இருந்து இறங்கியவுடன் அவர்கள் முறையான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டப்பின் விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்துவரப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விமானத்தில் மருத்துவ நிபுணர்கள் பணியில் இருப்பார்கள் என்றும், நோய்வாய்ப்பட்டவர்கள் இருப்பினும் உடனடி சிகிச்சை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு வந்தவுடன், அந்த நபர்கள் 45 நாட்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அதற்கான குறிப்பிட்ட விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
மேலும் அறிகுறிகளைக் காட்டும் எந்தப் பயணிகளுக்கும் கேனரி தீவுகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் என்றும், பொருத்தமான நேரத்தில் அவர்கள் தாயம் திரும்ப ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.




