இலங்கை செய்தி

இலங்கைக்கு 12 கடல் கண்காணிப்பு ட்ரோன்களை வழங்கியது ஆஸ்திரேலியா!

இலங்கை கடலோரக் காவல்படைக்கு ஆஸ்ரேலியா 12 கண்காணிப்பு ட்ரோன்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

மிரிஸ்ஸவில் உள்ள இலங்கை கடலோரக் காவல்படைத் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போதே ட்ரோன்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆஸ்ரேலியாவின் கடல் எல்லைக் கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் பிரட் சோன்டர் , இலங்கை கடலோரக் காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப்பிடம் 12 கண்காணிப்பு ட்ரோன்களையும் முறைப்படி கையளித்துள்ளார்.

இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஆஸ்திரேலிய தூதுவர் மத்யூ டக்வொர்த் மற்றும் ஆஸ்திரேலிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு கடல்சார் எல்லை முகாமைத்துவத்தில் ஆஸ்திரேலியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!