இலங்கை செய்தி

சிசு மரணம்: திருகோணமலையில் இரு வைத்தியர்கள் பணி நீக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் கடந்த ஏப்ரல் 09 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட பணி புறக்கணிப்பின்போது, சிசுவொன்று மரணித்தமை தொடர்பில் திருகோணமலை பொது வைத்தியசாலை வைத்தியர்கள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

விசேட மகப்பேறு வைத்தியர் மற்றும் சிரேஷ்ட பெண் வைத்தியர் ஆகியோரினது சேவையே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிசுவின் நிலை மோசமடைந்து வருவதாக வாட்டுக்கு பொறுப்பான வைத்தியர் 6 முறை தொலைபேசி மூலம் அழைத்தும், சம்பந்தப்பட்ட விசேட வைத்தியர் சம்பவ இடத்திற்கு வரவில்லை என விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலையில் அவசர நிலை நிலவிய அதே நேரத்தில், குறித்த விசேட வைத்தியர் ஒரு தனியார் வைத்தியசாலையில் சிசேரியன அறுவை சிகிச்சை ஒன்றில் ஈடுபட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

பணிநீக்கம் செய்யப்பட்ட விசேட வைத்தியர், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் திருகோணமலை மாவட்டத் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!