அறிவியல் & தொழில்நுட்பம்

மெட்டாவுக்கு பிரேசில் போட்ட உத்தரவின் பின்னணி என்ன?

  • January 12, 2025
  • 0 Comments

மெட்டா நிறுவனம் தனது தளத்தில் தகவல்களின் உண்மைத் தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றம் செய்ய உள்ளதாக அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக 72 நேரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசு காலக்கெடு விதித்துள்ளது. திங்கள்கிழமைக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பிரேசில் அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஜார்ஜ் மெசியாஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். உண்மைத் தன்மை சரிபார்ப்பு கொள்கையில் மாற்றம், குடியேற்றம் மற்றும் பாலின அடையாளம் போன்ற தலைப்புகளில் விவாதங்களைக் குறைத்த பிறகு […]

விளையாட்டு

இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிப்பு!

  • January 12, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இங்கிலாந்து அணி, ஜனவரி 22 முதல் பிப்ரவரி 12 வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்று விளையாடவிருக்கிறது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முதலில் நடைபெறவிருக்கும் நிலையில், டி20 தொடருக்கான இந்திய அணி சூர்யகுமார் யாதவ் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஒருவருடத்திற்கும் மேலாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்துவந்த முகமது ஷமி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான […]

வட அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து – லொஸ் ஏஞ்சலிஸில் தண்ணீர் பற்றாக்குறையால் தவிப்பு

  • January 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலிஸில் காட்டுத் தீ ஆபத்தான நிலையை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பகுதியில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு காட்டுத் தீ ஏற்பட்டது. இந்தநிலையில் பலத்த காற்று காற்று காரணமாகக் காட்டுத் தீ வேகமாகப் பரவியது. இதனையடுத்து 4 லட்சம் பேர் வரையில் தங்களது இருப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையால் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் […]

ஆஸ்திரேலியா

ஆசியாவிலேயே மிகவும் புத்திசாலி மக்களைக் கொண்ட நாடுகளில் இலங்கை

  • January 12, 2025
  • 0 Comments

ஆசிய பிராந்தியத்தில் அதிக IQ மதிப்பெண்களைக் கொண்ட நாடுகளின் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வை international-iq-test.com என்ற வலைத்தளம் நடத்தியது. அதன்படி, இலங்கை 12வது இடத்தில் உள்ளது மற்றும் இலங்கையின் IQ மதிப்பெண் 102.02 ஆகும். ஆசிய பிராந்தியத்தில் அதிக IQ மதிப்பெண்ணைக் கொண்ட நாடாக சீனா மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது, இதன் மதிப்பெண் 107.19 ஆகும். தென் கொரியா மற்றும் ஜப்பான் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பாகிஸ்தான் […]

இலங்கை

ஜெர்மனிக்கு செல்ல முற்பட்ட யாழ் இளைஞன் – கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • January 12, 2025
  • 0 Comments

ஜெர்மனிக்கு செல்ல முற்பட்ட இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். போலி ஜெர்மனி விசாவை பயன்படுத்தி செல்ல முயற்சித்த போது அவர் கைது யெ்யப்பட்டுள்ளார். விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் எல்லை நிர்ணய கண்காணிப்பு பிரிவின் அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர், புதுடில்லி சென்று பின்னர் அங்கிருந்து, மற்றுமொரு விமானத்தில் ஜெர்மனி நோக்கி பயணிக்க முற்பட்ட […]

உலகம் செய்தி

இந்த ஆண்டில் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் செல்ல வேண்டிய சிறந்த நாடுகள்

  • January 12, 2025
  • 0 Comments

2025 புத்தாண்டில் வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் செல்ல வேண்டிய சிறந்த நாடுகள் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது. Go overseas அறிக்கைகளின்படி இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய, இந்த புத்தாண்டில் வெளிநாடுகளில் வேலை செய்ய மிகவும் பொருத்தமான மூன்று நாடுகளில் நியூசிலாந்து, நெதர்லாந்து மற்றும் தென் கொரியா ஆகியவை இடம் பெற்றுள்ளன. புத்தாண்டு பிறக்க இரண்டு வாரங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், வெளிநாட்டில் உங்கள் கனவு வேலையைத் தொடர உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் செல்வதற்கு […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவை அச்சுறுத்தும் காட்டுத்தீ – கட்டுப்படுத்த முடியாமல் திணறல் – தப்பியோடும் மக்கள்

  • January 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் வேகமாக பரவிய காட்டுத்தீயால் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் கருகி சேதமடைந்துள்ளது. இந்த நிலையில், நீர் மேலாண்மையில் நடந்த குளறுபடி குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸை ஒட்டியுள்ள ஆண்டிலோப் பள்ளத்தாக்கிற்கும் சாண்டா கிளாரிட்டாவுக்கு இடையே உள்ள வனப்பகுதியில் கடந்த 7ஆம் திகதி பற்றி எரிய ஆரம்பித்த காட்டுத்தீ, கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகர் வரை சுமார் 35 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு மளமளவென பரவியது. காட்டுத்தீ காரணமாக ஒரு லட்சத்து 53 ஆயிரம் பேர் […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு

  • January 12, 2025
  • 0 Comments

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை எதிர்காலத்தில் 50 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே இதனை சுட்டிக்காட்டியுள்ளார். ஐந்து ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பித்ததன் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கான வரி வீதம் விசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி […]

செய்தி விளையாட்டு

நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் இணைந்த முகமது சமி

  • January 11, 2025
  • 0 Comments

இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகள் 5 டி20 போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 22ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. துணை கேப்டனாக அக்ஷர் பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் மீண்டும் முகமது சமி இடம் பிடித்துள்ளார். சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), சாம்சன், அபிஷேக் சர்மா, திலக், நிதிஷ் ரெட்டி, முகமது சமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ரானா, […]

ஆசியா செய்தி

கிழக்கு ஈராக்கில் நடந்த தாக்குதலில் நான்கு IS உறுப்பினர்கள் மரணம்

  • January 11, 2025
  • 0 Comments

கிழக்கு ஈராக்கில் உள்ள ஹம்ரின் மலைகளில் ஈராக்கிய விமானங்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு மூத்த தலைவர்கள் உட்பட நான்கு இஸ்லாமிய அரசு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்புத் தகவல்களைப் பரப்புவதற்குப் பொறுப்பான அதிகாரப்பூர்வ அமைப்பான ஈராக்கிய பாதுகாப்பு ஊடகப் பிரிவு, ஈராக்கிய F-16 போர் விமானங்கள் தாக்குதலை நடத்திய பகுதியில் இஸ்லாமிய அரசு (IS) போராளிகளின் நான்கு உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மற்றொரு போராளியின் அடையாளம் பரிசோதனைக்குப் பிறகு தீர்மானிக்கப்படும் […]