இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

இலங்கையில் சமூக ஊடகங்கள் ஊடாக கடன் – பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • January 19, 2025
  • 0 Comments

இலங்கையில் சமூக ஊடகங்கள் மற்றும் ஒன்லைன் முறைகள் மூலம் கடன்களை வழங்கும் பல மோசடிகள் தற்போது இணையத்தைப் பயன்படுத்தி இயங்குகின்றன. இந்த முறைகள் மூலம் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் மிகக் குறைவாக இருப்பதால், பலர் இந்த உடனடி கடன்களை நோக்கித் திரும்புகின்றனர். 2011 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க நிதி பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் பதிவு செய்யாமல் நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இந்த ஒன்லைன் கடன் மோசடியில் ஈடுபட்ட அதே வேளையில், […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ முட்டை – பில்லியனில் ஒன்றுதான்

  • January 19, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் ஒரு பில்லியனில் ஒன்றுதான் இருக்கும் என்று நம்பப்படும் வட்டமான முட்டை ஒன்று கண்டுபிடி்ககப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் டெவொன் மாநிலத்தில் உள்ள ஒரு பண்ணையில் வேலை செய்யும் ஊழியர் அதைக் கண்டுபிடித்தார். அலிசன் கிரீன் அந்தப் பண்ணையில் 3 ஆண்டுகளுக்கும் மேல் வேலை செய்துள்ளார். 42 மில்லியனுக்கும் அதிகமான முட்டைகளைக் கையாண்டிருக்கின்ற நிலையில் இது போன்ற வட்டமான முட்டையைப் பார்த்ததே இல்லை என்று கிரீன் தெரிவித்துள்ளார். அந்த முட்டையை ஏலத்திற்கு அனுப்ப அவர் எண்ணுகிறார். அதில் கிடைக்கும் பணத்தை […]

வட அமெரிக்கா

அமெரிக்கா தீ பரவல் சம்பவத்துக்கு பறவை காரணமா ? உலா வரும் போலி காணொளி

  • January 19, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் ஏற்பட்ட தீ பரவல் சம்பவத்துக்கு பறவையே காரணம் என போலி தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் சமூக ஊடகங்களில் வரும் காணொளி போலியானது என தெரியவந்துள்ளது. 2 தினங்களாக தீயை கக்கும் ஒரு பறவை காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது. அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தீ பரவலுக்கு குறித்த பறவையே காரணம் என ஒருவர் கூறுகின்றார். அமெரிக்காவில் ஒவ்வொரு வருடமும் ஏற்படும் காட்டுத்தீ சம்பவங்களுக்கு இந்த […]

விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகும் பும்ரா

  • January 19, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துகிறார். துணைக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிட்னியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Gmail மற்றும் Docsஇல் வந்தது ஜெமினி ஏ.ஐ

  • January 19, 2025
  • 0 Comments

இனி Google Workspace தொகுப்பு பயனர்கள் ஜெமினி ஏ.ஐ அனுபவங்களை இலவசமாக பெறலாம். Gmail, Docs, Sheets மற்றும் கூகுள் மீட் ஆகியவற்றில் பயன்படுத்தலாம். பல வொர்க் ஸ்பேஸ் சூட் பயனர்களுக்கு இது அருமையான செய்தியாக இருந்தாலும், கூகுள் அனைத்து Workspace சூட் திட்டங்களின் விலையை ஒரு மாதத்திற்கு $2 ஆக உயர்த்தியுள்ளது, இதன் மூலம் சந்தாவின் ஆரம்ப விலையை மாதத்திற்கு $12ல் இருந்து $14 ஆக உயர்த்தியுள்ளது. ஜெமினி ஏ.ஐ ஆனது பணியிடத் தொகுப்பு முழுவதும் […]

ஆப்பிரிக்கா

மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்களை கொலை செய்வதற்கு திட்டம்

  • January 19, 2025
  • 0 Comments

மொராக்கோ நாட்டில் 30 லட்சம் நாய்களை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக கோப்பை கால்பந்து தொடரை முன்னிட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. 2030 ஆண்டு கால்பந்து உலக கோப்பை தொடர், ஸ்பெயின், போர்ச்சுகல், மொராக்கோ ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதன் காரணமாக இந்த நாடுகளுக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தசூழலில், தங்கள் நாட்டிலுள்ள 30 லட்சம் தெருநாய்களை கொல்லும் நடவடிக்கையில், மொராக்கோ அரசு இறங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நச்சுத்தன்மை […]

இன்றைய முக்கிய செய்திகள் மத்திய கிழக்கு

போர்நிறுத்தம் தற்காலிகமானது – மீண்டும் பரபரப்பு எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல் பிரதமா்

  • January 19, 2025
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பு உடனான போா்நிறுத்தத்தை தற்காலிகமானது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். அவசியம் எழும் சூழலில் தொடா்ந்து தாக்குதல் நடத்தப்படும் என அவர் மீண்டும் எச்சரிக்கை விடுத்து்ளார். போா்நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பு நாட்டுமக்களிடம் உரையாற்றிய அவர், ‘அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவும் எனக்கு இருக்கிறது. கடந்த புதன்கிழமைகூட அவரிடம் பேசினேன். லெபனான் மற்றும் சிரியாவில் இஸ்ரேலின் ராணுவ வெற்றிகளே ஹமாஸ் உடனான போர்நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதற்கு காரணம். மத்திய கிழக்கு பிராந்தியத்தின் […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்க – கனடா வர்த்தகப் பூசல் – அடுத்த பிரதமராகும் முயற்சியில் மூத்த அமைச்சர்

  • January 19, 2025
  • 0 Comments

கனடாவின் ஆளும் மிதவாதக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குப் போட்டியிட எண்ணுவதாக அரசாங்க மூத்த அமைச்சரான Chrystia Freeland தெரிவித்துள்ளார். கனடாவின் அடுத்த பிரதமராக விரும்புவதாகவும் அவர் தம்முடைய சமூக ஊடகத்தில் தெரிவித்தார். கனடியப் பிரதமர் ஜஸ்ட்டின் ட்ரூடோகிட்டத்தட்ட பத்தாண்டுக்குப் பிறகு பதவி விலகினார். துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான Chrystia Freeland சென்ற மாதம் பதவி விலகினார். அவர் ட்ரூடோவை வெளிப்படையாகக் குறைகூறினார். டொனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக பொறுப்பேற்கும்போது ட்ரூடோவால் சமாளிக்க முடியுமா என்று […]

செய்தி

பிரான்ஸில் வீடற்றவர்களுக்காக பொலிஸார் எடுத்த நடவடிக்கை

  • January 19, 2025
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீடற்றவர்களுக்காக பொலிஸார் மிகப்பெரிய உதவியை செய்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தின் போதும் வீடற்றவர்களுக்காக தங்குமிடங்கள் அமைத்துக்கொடுப்பது வழக்கமாகும். இம்முறை 120,000 பேருக்கான தங்குமிடங்களை இல் து பிரான்ஸ் மாகாணம் ஏற்பாடு செய்துள்ளது. அதன் ஒரு அங்கமாக புதன்கிழமை பரிஸ் பொலிஸார் தலைமைச் செயலகம் மேற்கொண்ட நடவடிக்கையில், 294 பேருக்கு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். பாரிஸ் 10 ஆம் வட்டாரம் தொடக்கம் 19 ஆம் வட்டாரம் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஆபத்தான முறையில், […]

இலங்கை

இலங்கையில் கடுமையான உப்பு தட்டுப்பாடு – இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி

  • January 19, 2025
  • 0 Comments

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுமென இலங்கை அரசு வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் உப்பு இறக்குமதி செய்யப்படும். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு உப்பு இறக்குமதி செய்ய இரண்டு இறக்குமதியாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் பொது மேலாளர் சமிலா இதமல்கோடா உறுதிப்படுத்தினார். அதன்படி, ஜனவரி 31 ஆம் திகதிக்கு முன்பு 30,000 மெட்ரிக் தொன் உப்பு இலங்கைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த பருவமழை காலத்தின் உள்ளூர் உப்பு உற்பத்தியில் ஏற்பட்ட தாக்கத்தைத் […]