செய்தி

பிரான்ஸில் வீடற்றவர்களுக்காக பொலிஸார் எடுத்த நடவடிக்கை

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வீடற்றவர்களுக்காக பொலிஸார் மிகப்பெரிய உதவியை செய்துள்ளனர்.

ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தின் போதும் வீடற்றவர்களுக்காக தங்குமிடங்கள் அமைத்துக்கொடுப்பது வழக்கமாகும்.

இம்முறை 120,000 பேருக்கான தங்குமிடங்களை இல் து பிரான்ஸ் மாகாணம் ஏற்பாடு செய்துள்ளது.

அதன் ஒரு அங்கமாக புதன்கிழமை பரிஸ் பொலிஸார் தலைமைச் செயலகம் மேற்கொண்ட நடவடிக்கையில், 294 பேருக்கு தங்குமிடங்கள் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.

பாரிஸ் 10 ஆம் வட்டாரம் தொடக்கம் 19 ஆம் வட்டாரம் வரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில், ஆபத்தான முறையில், சிறிய கூடாரங்களிலும், மெற்றோ நிலையங்களிலும் பூங்காக்களிலும் உறங்கிக்கொண்டிருந்தவர்களே வெளியேற்றப்பட்டனர்.

இல் து பிரான்ஸ் மாகாண சபை ஒவ்வொரு நாளும் 120,000 பேருக்கான தங்குமிடங்களை ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

உடற்பயிற்சி கூடங்கள், கல்வி நிலையங்கள் என பல்வேறு இடங்களை இதற்காக இரவு நேரங்களில் ஒப்பந்த அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி