இந்தியா

04 நாடுகளில் முதல் முறையாக எரிபொருள் விலையை உயர்த்திய இந்தியா!

உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்ட இழப்புகளில் சிலவற்றை ஈடுசெய்யும் பொருட்டு, இந்தியா நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலையை உயர்த்தியுள்ளது.

ஒரு லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை 3 ரூபாய் ($0.03) அல்லது 3% க்கும் அதிகமாக உயர்த்தியுள்ளது என்று டெல்லியில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் இன்று தெரவித்துள்ளனர்.

டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் விலை 90.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 97.77 ரூபாயாகவும் இருக்கும்.

இது, ஒரு லிட்டர் டீசல் விலை 87.67 ரூபாயாகவும், பெட்ரோல் விலை 94.77 ரூபாயாகவும் இருந்ததிலிருந்து முறையே 3.4% மற்றும் 3.2% அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களால் தொடங்கிய நெருக்கடி நிலை காரணமாக உலகளாவிய ரீதியில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் நிமிதம் உலகளாவிய எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு $120 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளன. பின்னர் சுமார் $100 முதல் $105 வரை குறைந்தன.

இந்நிலையில் எரிபொருள் சந்தையில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக விலை உயர்வுகளிலும் ஏற்ற இறக்கங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!