இலங்கை ரூபாய்க்கு என்ன நடக்கிறது? மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட தகவல்
இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி குறித்த அண்மைய அறிக்கைகளுக்கு தீர்வுகாண மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க, ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியிலிருந்து நாணயச் செயற்பாடுகளை வேறுபடுத்திக் காண்பது முக்கியம் எனத் தெரிவித்தார். மத்திய வங்கியின் நாணயக் கொள்கை மீளாய்வை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த வருடத்தில் ரூபாவின் பெறுமதி 1.8% வீழ்ச்சியடைந்தமை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே வீரசிங்க மேற்கண்டவாறு கூறினார். “தேவை மற்றும் விநியோகத்தின் அடிப்படையில் சந்தையில் மாற்று விகிதம் நிர்ணயிக்கப்படும். […]













