வர்த்தக பேச்சுவார்த்தைகள் முறிவு – கனேடிய பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு
மதுபானம், பால் பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட கனடியப் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.
இது தொடர்பில் நேற்று பிறப்பிக்கப்பட்ட நிர்வாக உத்தரவில், கனடா அமெரிக்க வர்த்தகத்திற்கு எதிராக “பாரபட்சம்” காட்டுவதாக குற்றம் சாட்டி செப்டம்பர் 29 முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த பொருட்களுக்கு தடை விதிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் வெள்ளை மாளிகை சுமார் 20 பில்லியன் டொலர் (14.8 பில்லியன் பவுண்டுகள்) மதிப்பிலான கனடியப் பொருட்கள் மீது 50 சதவீதம் வரி விதித்தது.
அந்த வரிகள் கனடாவின் மரச்சாமான்கள் மற்றும் ஒயின் (wine) தொழில்கள், அத்துடன் விளையாட்டு மற்றும் மீன்பிடி உபகரணங்கள் சார்ந்த வணிகங்கள் ஆகியவற்றைப் பாதித்தன.
இதற்குப் பதிலடியாக, கனடா எஃகு, ஆடைகள் மற்றும் மரச்சாமான்கள் போன்ற அமெரிக்கப் பொருட்கள் மீது சமமான மதிப்பிலான பதிலடி வரிகளை விதித்தது. இந்த எதிர்-வரிகள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு நடைமுறைக்கு வந்தன.
கனடாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடியாக பால் உள்ளிட்ட பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.




