இந்திய வருமான வரி அடுக்குகள் 2025: தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம்
இந்தியாவில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின் 2025-26ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் சனிக்கிழமை (1) தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். நிதி நிலை அறிக்கையில் நடுத்தர மக்களுக்கு ரூ.12 லட்சம் வரை வரிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஒரு தனிநபரின் ஆண்டு வருவாய் ரூ.12 லட்சம் வரை இருந்தால் அவர் இனி வருமான வரி செலுத்தத் தேவை இல்லை. […]













