இலங்கை: 10 அரச நிறுவனங்களுக்கு 7456 பேரை ஆட்சேர்ப்பு செய்ய ஒப்புதல்
பத்து அரச நிறுவனங்களுக்கு 7,456 பணியாளர்களை இணைத்துக் கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச சேவை ஆட்சேர்ப்பு செயல்முறையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “நாங்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது, அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பாக பல பிரச்சினைகள் இருந்தன,” என்று அமைச்சர் ஜயதிஸ்ஸ கூறினார். அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்புகள் பின்வருமாறு விநியோகிக்கப்படும்: 1. பொது நிர்வாகம், மாகாண சபைகள் […]













