ஆசியா செய்தி

தென்கொரியாவின் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியரின் விபரீத முயற்சி

  • February 11, 2025
  • 0 Comments

தென்கொரியாவின் Daejeon நகரில் 8 வயது மாணவியைக் கொலை செய்த ஆசிரியர் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளார். நேற்று அங்குள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் நடந்தது என்று உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டன. மாணவி கழுத்திலும் முகத்திலும் கத்திக்குத்துக் காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டதாகத் தீயணைப்புப் பிரிவு தெரிவித்தது. பின் மருத்துவமனையில் அவர் இறந்ததாகக் கூறப்பட்டது. பாடசாலை ஆசிரியராகப் பணியாற்றும் சுமார் 40 வயது நிரம்பிய மாதும் கத்திக்குத்துக் காயங்களுடன் சம்பவ இடத்தில் காணப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அவர் குற்றத்தை […]

உலகம் செய்தி

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மீண்டும் மாற்றம்

  • February 11, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.44 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் […]

இலங்கை செய்தி

இலங்கையில் மின் தடைக்கான காரணத்தை வெளியிட்ட சஜித் பிரேமதாச!

  • February 11, 2025
  • 0 Comments

இலங்கையில் ஏற்பட்ட மின்சாரத் தடைக்கு முதலில் குரங்கைக் குறை கூறிய அரசாங்கம், பின்னர் முந்தைய அரசாங்கங்கள்மீது பழி சுமத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஆனால் உண்மையான பிரச்சினை என்ன என்பதை இனங்காண அவர்கள் சிந்திக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனது x கணக்கில் இது தொடர்பில் பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவையுள்ள காலங்களை நிர்வகிக்கத் தவறிய மோசமான நிர்வாகமும்தான் மின்தடைக்கான உண்மையான காரணம் என […]

செய்தி

இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிமுறைகள்

  • February 11, 2025
  • 0 Comments

இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்? 1) மருத்துவப் பரிசோதனை அவ்வப்போது மருத்துவப் பரிசோதனை செய்வதால் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, ரத்தத்திலுள்ள சர்க்கரை அளவு ஆகியவற்றைச் சரிபார்க்கலாம். அதன் அடிப்படையில் இதய நோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா என்பதை முன்கூட்டியே கணிக்கலாம் என்று கூறுகிறது New York Times இணையத்தளம். 2) சிகரெட் பழக்கத்தைக் கைவிடுதல் சிகரெட் புகைப்பதால் இதயத்தில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் உறையலாம். அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். […]

இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

மின் தடை தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

  • February 11, 2025
  • 0 Comments

நாளை மறுதினம் நுரைச்சோலையில் உள்ள லக்விஜய நிலக்கரி அனல் மின் நிலையத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அப்போது தேசிய அமைப்பில் மின்சார விநியோகத்தை நிர்வகிக்க வேண்டிய அவசியமில்லை என இலங்கை மின்சார சபை கூறியது. இந்த நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை மின்வெட்டு ஏற்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு 4மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 1 மணி நேரம் 30 நிமிடங்கள் […]

இலங்கை

டேன் பிரியசாத் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

  • February 11, 2025
  • 0 Comments

சிங்கள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டேன் பிரியசாத், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று காலை டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்தபோது கைது செய்யப்பட்டார். நிக்கவரெட்டிய பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மத்திய கிழக்கு

ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல் – பிணைக் கைதிகள் விடுவிப்பதை நிறுத்திவைத்த ஹமாஸ்

  • February 11, 2025
  • 0 Comments

இஸ்ரேல் ஒப்பந்தத்தை மீறியதால் பிணைக் கைதிகள் விடுவிப்பதை மறு அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. காசா பகுதியில் தாக்குதலைத் தொடருவதன் மூலம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறிவிட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக, 33 இஸ்ரேலிய பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். 16 பேர் ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 17 பேரில் 8 பேர் இறந்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 9 பேர் இன்னும் விடுவிக்கப்படவேண்டி […]

அறிவியல் & தொழில்நுட்பம் செய்தி

புற்றுநோயை 99.8 சதவீதம் சரியாக கண்டறியும் ஏ.ஐ. தொழில்நுட்பம்!

  • February 11, 2025
  • 0 Comments

தோல் புற்றுநோயை தொடக்க நிலையிலேயே எளிதில் கண்டறியும் வகையிலான செயற்கை புலனறிவு தொழில்நுட்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. இதன்மூலம், புற்றுநோயால் உயிரிழப்போரின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும் என்று தொழில்நுட்ப நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானதாக புற்றுநோய் திகழ்கிறது. உலகளாவிய அளவில் புற்றுநோயாளிகளில் 40 சதவீதம் அளவுக்கு தோல் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்த நோயால் ஆண்டுதோறும் 20 லட்சம் பேர் முதல் 30 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தோல் புற்றுநோயை […]

செய்தி

47 ஆண்டு கால உலக சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுக வீரர்

  • February 11, 2025
  • 0 Comments

லாகூரில் இன்று நடைபெற்று வரும் முத்தரப்பு ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 2-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் அறிமுகத் தொடக்க வீரர் மேத்யூ பிரெட்ஸ்கீ 148 பந்துகளில் 150 ரன்களை விளாசி நியூஸிலாந்துக்கு எதிராக உலக சாதனை புரிந்தார். அதாவது, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் அறிமுகப் போட்டியில் ஒரு வீரர் எடுக்கும் அதிகபட்ச ஸ்கோர் இதுவே என்பதால் உலக சாதனை நாயகராகியுள்ளார் 26 வயது பிரெட்ஸ்கீ. இவர் 148 பந்துகளில் 11 பவுண்டரிகள் 5 […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனியில் வேகமாக பரவும் காய்ச்சல் – பொது மக்களுக்கு விசேட எச்சரிக்கை

  • February 11, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் தொடர்ந்து காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து, சிறுவர்கள் உட்பட பாரிய அளவிலான மக்கள் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரொபர்ட் கோச் இன்ஸ்டிடியூட் வெளியிட்ட வார அறிக்கைக்கமைய, காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வருவதுடன். சுவாச வைரஸ்கள் தொற்றுகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மக்கள் எந்த நோய் தொற்றினால் பிடித்திருக்கிறீர்கள் என்பதை அறிய விரும்பினால், கூட்டு சுய பரிசோதனைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே பரிந்துரைக்கப்படுகின்றன. காய்ச்சல் வரும்போது, […]