இலங்கை – 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 155 வாக்குகளால் நிறைவேற்றம்!
இலங்கை – தற்போதைய அரசாங்கத்தின் முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு இன்று (25) பிற்பகல் நடைபெற்றது. அதன்படி, வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் பெறப்பட்டன. எந்த உறுப்பினரும் வாக்களிப்பதைத் தவிர்க்கவில்லை. அதன்படி, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 வாக்குகளால் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் தெரிவித்தார்.













