வாழ்வியல்

தலைமுடியை பாதுகாக்கும் ஹெர்பல் ஷாம்பு வீட்டிலேயே தயாரிக்கும் முறை..!

  • February 25, 2025
  • 0 Comments

முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50 கிராம் காய்ந்த நெல்லிக்காய்- 50 கிராம் பூந்திக்கொட்டை- 50 கிராம் வெந்தயம் -ஒரு ஸ்பூன் காய்ந்த செம்பருத்தி பூ மற்றும் இலைகள் -50 கிராம் கருவேப்பிலை- ஒரு கைப்பிடி வேப்பிலை- ஒரு கைப்பிடி சுத்தமான தண்ணீர்- இரண்டு லிட்டர். செய்முறை; மேலே கூறிய அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் சேர்த்து அதில் இரண்டு லிட்டர் சுத்தமான தண்ணீரை […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பு

  • February 25, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.78 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.99 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை

இலங்கையில் அதிக வெப்பநிலையால் குடிநீர் இன்றி மக்கள் சிரமம்

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் நிலவும் வெப்பமான காலநிலையால், பல பகுதிகளில் மக்கள் தற்போது குடிநீர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். அதற்கமைய, இரண்டாயிரத்து 278 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலேயே மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது. சில பகுதிகளில் தாங்கி ஊர்திகளைப் பயன்படுத்தி மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் சிறுவர் கும்பலால் ஏற்பட்ட அதிர்ச்சி – நால்வர் கைது

  • February 25, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் – மெல்போர்னின் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த நான்கு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். அவர்கள் 14 முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. நேற்று அதிகாலை 4 மணியளவில் அறையில் பலர் சத்தம் கேட்டு அலறியதாக வீட்டில் இருந்த தம்பதியினர் தெரிவித்தனர். பொலிஸாரை அழைக்க முயன்றபோதும், அவர்கள் உடனடியாக தனது தொலைபேசியைப் பிடுங்கி, கார் சாவியைக் கேட்டதாக அந்தப் பெண் கூறினார். அவரது கணவர் பொலிஸாருக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து, பொலிஸார் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமின் புதிய அப்டேட் அறிவிப்பு

  • February 25, 2025
  • 0 Comments

மெட்டாவுக்குச் சொந்தமான பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமுக்கு, சமீப காலமாகவே மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஏப்ரல் 2024 நிலவரப்படி, இன்ஸ்டாகிராமில் 2 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர செயலில் உள்ள யூசர்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது உலகின் நான்காவது பெரிய சமூக வலைதளமாக இருக்கிறது. யூசர்களின் வசதிக்கேற்ப அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை கொண்டு வரும் மெட்டா அதன் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய மூன்று தளங்களையும் ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆப்பிற்கும் அதன் […]

விளையாட்டு

சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து!

  • February 25, 2025
  • 0 Comments

வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி இடத்தை உறுதிசெய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 236 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து 46.1 ஓவரில் 240 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் ரச்சின் ரவீந்திரா 112 ரன்கள் குவித்தார். இதன் மூலம் நியூசிலாந்து, இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்றதால் குரூப் ‘ஏ’-வில் இருந்து இந்த […]

ஆசியா

திருமணம் செய்யாதவர்கள் பணிநீக்கம் – சீன நிறுவனத்தின் உத்தரவால் சர்ச்சை

  • February 25, 2025
  • 0 Comments

சீன நிறுவனம் ஒன்றில் இருந்து ஒற்றையர்கள், விவாகரத்துப் பெற்ற ஊழியர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவர் என அதன் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இறுதிக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தை அதிகாரிகள் குறைகூறியுள்ளனர். அதைத் தொடர்ந்து நிறுவனம் அந்தக் கொள்கையைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. The Shuntian Chemical Group எனப்படும் குறித்த நிறுவனம் தென் சீனாவில் உள்ள ஷண்டோங் மாநிலத்தில் அமைந்துள்ளது. 1,200க்கும் அதிகமான ஊழியர்கள் அங்கு வேலை […]

இலங்கை

இலங்கையின் சில இடங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

  • February 25, 2025
  • 0 Comments

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 100 […]

இன்றைய முக்கிய செய்திகள் செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் தொடரும் நெருக்கடி – 1,600 அரசு ஊழியர்கள் பணிநீக்கம்: டிரம்ப் உத்தரவு

  • February 25, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் 1,600 ஊழியர்கள பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி கடந்த மாதம் பதவியேற்ற டிரம்ப், பல்வேறு முக்கிய திருத்தங்களை மேற்கொண்டு வருகிறார். அதில், முக்கியத்துவம் வாய்ந்தது அரசுத் துறைகளில் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை ஆகும். ஏற்கெனவே லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு 8 மாத ஊதியத்துடன் கட்டாய இராஜிநாமா செய்துகொள்ள டிரம்ப் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருந்தது. கடந்த மாதம் வெளியிட்டிருந்த உத்தரவில், பிப்ரவரி 6ஆம் திகதிக்குள் பணியில் இருந்து இராஜிநாமா செய்துகொண்டால் 8 மாத […]

ஐரோப்பா செய்தி

ஜெர்மனி மக்களுக்கு எதிர்வரும் ஆண்டுகளில் காத்திருக்கும் நெருக்கடி

  • February 25, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் எதிர்வரும் ஆண்டுகளில் எரிபொருள் விலைகள் மிகவும் விலை உயர்ந்ததாக மாறும் என ADAC மோட்டார் வாகன சங்கம் எச்சரித்துள்ளது. நுகர்வோருக்கு ஆதரவளிக்கும் திட்டங்களை வகுக்க எதிர்கால அரசாங்கத்தை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெர்மனியில் உள்ள ஓட்டுநர்கள் ஏற்கனவே எரிபொருள் செலவுகள் அதிகரித்து வருவதைக் கண்டனர். ஜெர்மனியின் மிகப்பெரிய மோட்டார் வாகன சங்கமான ADAC, வரும் ஆண்டுகளில் இது இன்னும் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எச்சரித்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு வரியில் எதிர்பார்க்கப்படும் […]