ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் தொடரும் புயல் எச்சரிக்கை – பொதுமக்களுக்கு ஒரு விசேட எச்சரிக்கை

  • March 8, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் தற்போதைய சூறாவளி சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு கோல்ட் கோஸ்ட்டில் வசிப்பவர்களுக்கு ஒரு சிறப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, கோல்ட் கோஸ்ட்டின் தற்காலிக மேயர் டோனா கேட்ஸ், குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறியுள்ளார். புயல் நிலைமை இன்னும் உறுதியாகத் தீர்க்கப்படாததால், உள்ளூர்வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். எதிர்காலத்தில் இந்தப் பகுதியில் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 6 மணி நேரத்திற்குள் சுமார் 255 […]

வட அமெரிக்கா

சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற புதிய நடவடிக்கை – ட்ரம்ப் அறிவிப்பு

  • March 8, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்ற இனி இராணுவ விமானம் பயன்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் சொந்த நாட்டிற்கு அனுப்ப இராணுவத்துக்கு சொந்தமான சி 17 விமானங்கள் பயன்படுத்தப்பட்டது. சட்டவிரோதமாக குடியேறினால், அதனை சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், இராணுவ விமானம் பயன்படுத்தப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. கடைசியாக சட்டவிரோதமாக குடியேறியவர்களை மார்ச் 1ம் திகதி ராணுவ விமானம் மூலம் அவர்களது நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பியது. இந்த நிலையில், சட்டவிரோதக் குடியேறிகளை […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • March 8, 2025
  • 0 Comments

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை மாற்றமடைந்துள்ளது. அதற்கமைய, விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.04 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 70.36 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 4.399 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

வாழ்வியல்

சரியாகத் தூங்கவில்லை என்றால் காத்திருக்கும் ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

  • March 8, 2025
  • 0 Comments

மனித வாழ்க்கைக்கு உணவும் தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அவ்வளவு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவுக்காக நேரத்தை ஒதுக்கிச் செலவழிப்பதைப்போல, உறக்கத்திற்கும் நாம் நேரத்தைச் செலவிட வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால், உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். சரியான நேரத்தில், சரியான கால அளவில் தூங்குபவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வருவதில்லை. ஆனால், சரியாகத் தூங்கவில்லை என்றால் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் என்று குவைத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. டிடிஐ என்னும் ஆய்வு மையம் 227 பேரை 24 மணி நேரம் […]

இலங்கை செய்தி

இலங்கையில் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

  • March 8, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் 10 ஆம் ,11 ஆம் திகதிகளில் தற்போது நிலவும் வெப்பமான வானிலை தற்காலிகமாக மாற்றமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில், குறிப்பாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும். நாட்டின் பல இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம்

2026 ஆம் ஆண்டில் அதிக வேலை விசாக்களை அனுமதிக்கும் நாடுகள் தொடர்பில் வெளியான தகவல்

  • March 8, 2025
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் அதிக வேலை விசாக்களை அனுமதிக்கும் நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். திறமையான தொழிலாளர்களுக்கு வெளிநாட்டினரை ஈர்ப்பது தொடர்பாக ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சட்டங்களை பரிசீலித்த பிறகு இது தெரியவந்தது. 2024-2025 நிதியாண்டில் திறமையான தொழிலாளர்களுக்கான ஆஸ்திரேலியாவின் ஒதுக்கீடு 150,000 ஆகும். இருப்பினும், இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியா சுமார் 185,000 பேருக்கு திறமையான தொழிலாளர் விசாக்களை வழங்கியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. தற்காலிக திறமையான தொழிலாளர் விசாக்களில் இருப்பவர்களுக்கு நிரந்தர வதிவிடத்தை அனுமதிக்க ஆஸ்திரேலியாவின் விசா முறை […]

ஐரோப்பா

மூன்றாம் உலகப் போர் ஏற்படும் அபாயம் – ட்ரம்ப் எச்சரிக்கை

  • March 8, 2025
  • 0 Comments

ரஷ்யா-உக்ரைன் போரை தடுத்து நிறுத்தா விட்டால் அது மூன்றாம் உலகப் போருக்கு காரணமாகி விடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இதனை குறிப்பிட்டுள்ளார். தாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் இந்தப் போரே தொடங்கியிருக்காது என டிரம்ப் தெரிவித்தார். போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி புட்டின் விரும்புவதாக தெரிவித்த டிரம்ப், உக்ரைனிடம் எந்தப் பிடிமானமும் இல்லாத நிலையில் அதனை எதிர்கொள்வது கடினமாக இருப்பதாகவும் ரஷ்யாவோடு பேச்சு நடத்துவது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

AI யுகத்தில் நுழையும் Zoho

  • March 8, 2025
  • 0 Comments

தொழில்நுட்ப உலகில் தற்போது செயற்கை நுண்ணறிவு ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ளது. வணிக நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை மேம்படுத்தவும், செலவுகளை குறைக்கவும் தானியங்கி தொழில்நுட்பங்களை நோக்கி படையெடுத்து வருகின்றன. இந்த யுகத்தில், மென்பொருள் சேவைகள் (SaaS) வணிகங்களின் முதுகெலும்பாக மாறிவிட்டன. இந்த சந்தையில், Zoho நிறுவனம் ஒரு முக்கிய பங்காற்றுகிறது. அவர்கள் தற்போது புதிய AI மாதிரிகளை உருவாக்கி வருகின்றனர். இந்த புதிய முயற்சிக்கு “Small Language Models” என்று பெயரிடப்பட்டுள்ளது. Zoho, ChatGPT போன்ற […]

விளையாட்டு

ICCயின் பிப்ரவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஷுப்மன் கில்!

  • March 8, 2025
  • 0 Comments

ஐசிசியின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியாளர்கள் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்ந்தெடுத்து அவர்களில் ஒருவருக்கு அம்மாதத்துக்கான சிறந்த வீரர் விருதினை ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணியின் ஷுப்மன் கில் மற்றும் நியூசிலாந்தின் கிளன் பிலிப்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஸ்டீவ் ஸ்மித் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலைகளில் பணம் அறவிட்டால் நடவடிக்கை – பிரதமர் அதிரடி அறிவிப்பு

  • March 8, 2025
  • 0 Comments

பாடசாலைகளில் பணம் அறவிடுவது குறித்து தகவல் தெரிவித்தால், உடனடி விசாரணை மேற்கொள்ளப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வித்துறையில் உருவாகியுள்ள பல நெருக்கடிகளுக்கு கல்விக் கொள்கைகள் முறையாக அமுல்படுத்தாமையும் அரசியல் தலையீடுகளுமே காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாடசாலைகளில் இடம்பெறும் நிதி சேகரிப்பு தொடர்பில் துரித விசாரணைகள் நடத்தப்படுமெனவும் பிரதமர் குறிப்பிட்டார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இடம்பெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டத்தொடரில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே […]