ஐரோப்பா

அமைதியான போர் நிறுத்த பேசுவார்த்தைக்கு புடின் உண்மையில் இணங்குகிறாரா?

  • March 12, 2025
  • 0 Comments

கியேவ் போர்நிறுத்தத்திற்குத் தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்த சில மணிநேரங்களுக்குப் பிறகு ரஷ்யா உக்ரைன் முழுவதும் தீவிர தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது. ரஷ்யவின் இந்த நடவடிக்கையானது டொனால்ட் டிரம்பின் அமைதிக்கான கோரிக்கைகளுக்கு விளாடிமிர் புடினின் தயார்நிலையில் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தாக்குதல்களில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உக்ரைனின் இரண்டாம் நகரமான கார்கிவ் மீது ஈரான் வடிவமைத்த ஷாஹெட் ட்ரோன்களை ஏவி ரஷ்யா தாக்குதல்களை முன்னெடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.  

ஆசியா

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ரயில் : பணய கைதிகளை மீட்க போராடும் படையினர்!

  • March 12, 2025
  • 0 Comments

பாகிஸ்தானில் 300 பணய கைய்திகளுடன் ரயில் ஒன்று கடத்தப்பட்ட நிலையில் அவர்களை மீட்க அதிகாரிகள் போராடி வருகின்றனர். பணயக்கைதிகள் வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட ஆடைகளை அணிந்திருந்த தீவிரவாதிகளால் சுற்றி வளைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 27 பேர் கொள்ளப்பட்டுள்ளதாகவும் 150 பணய கைதிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தீவிரவாதிகள் இத்தகைய தாக்குதலை நடத்தியது இதுவே முதல் முறை. பலூச் லிபரேஷன் ஆர்மி குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது, அத்துடன் கைதிகளை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகக் […]

பொழுதுபோக்கு

ரஜினி அடுத்து யாருடன் இணைகின்றார் தெரியுமா? இவரா?

  • March 12, 2025
  • 0 Comments

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் முதல் முறையாக நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், சோப்பின் சபீர், உபேந்திரா ஆகியோர் நடித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி, நடிகை பூஜா ஹெக்டே இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்திற்கு பின் ரஜினி ஜெயிலர் 2 […]

பொழுதுபோக்கு

தனுஷ் குறித்து கீர்த்தி என்ன சொன்னார் தெரியுமா?

  • March 12, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இயக்குநர் என பன்முகம் கொண்டவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் வெளியானது. அதை தொடர்ந்து இட்லி கடை என்ற திரைப்படம் உருவாகி வருகின்றன. தற்போது தனுஷ் நடிப்பில் குபேரா திரைப்படம் வரும் ஜூன் 20 – ம் தேதி வெளிவர உள்ளது. இதற்கிடையே பாலிவுட்டிலும் தேரே இஷ்க் மெயின் என்ற ஒரு படத்தில் நடித்துவருகிறார் தனுஷ். இந்த […]

பொழுதுபோக்கு

விஜய் இல்லாத சினிமா எப்படி இருக்கும்??

  • March 12, 2025
  • 0 Comments

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கி இருக்கிறார். அதனால் தற்போது நடித்து வரும் ஜனநாயகன் படம் தான் தனது கடைசி படம் என ஏற்கனவே அறிவித்துவிட்டார். விஜய் சினிமாவை விட்டு சென்றால் சினிமாவில் ஒரு வெற்றிடம் உருவாகும் என ஏற்கனவே பேச்சு எழுந்து வருகிறது. இந்நிலையில் பிரபல காமெடி நடிகரும், இயக்குனருமான சிங்கம் புலி செய்தியாளர்களை சந்தித்த போது விஜய் பற்றிய கேள்விக்கு பதில் […]

உலகம்

சிரியாவில் 14 ஆண்டு கால பிரச்னைக்குத் தீர்வு

  • March 12, 2025
  • 0 Comments

சிரியாவில் 14 ஆண்டு கால பிரச்னைக்குத் இடைக்கால அரசாங்கம் தீர்வு கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிரியாவில் அமெரிக்க ஆதரவுடன் செயல்பட்டு வரும் SDF என்ற சிரியன் ஜனநாயகப் படையினர், அரசு நிறுவனங்களில் இணைந்து கொள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தலைநகர் டமாஸ்கஸ் உள்ளிட்ட இடங்களில் SDF படையினர் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சிரியாவின் எண்ணெய் வளங்கள் நிறைந்த வட கிழக்குப் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள, SDF படையுடன் 14 ஆண்டு கால பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதாக, இடைக்கால அதிபர் […]

வட அமெரிக்கா

டிரம்பின் வரிவிதிப்பு கொள்கை தொடர்பில் வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிவிப்பு

  • March 12, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு கொள்கையில் தவறு ஒன்றும் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. உலக நாடுகள் வரிகளால் அமெரிக்காவை கபளீகரம் செய்யும்போது இறக்குமதி பொருட்களுக்கு டொனால்டு டிரம்ப் கூடுதல் வரி விதிப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. அமெரிக்க மதுபானத்திற்கு இந்தியா 150 சதவீதம் வரியும், வெண்ணெய் போன்ற உணவுப்பொருட்களுக்கு கனடாவில் 300 சதவீத வரியும், அரிசிக்கு ஜப்பான் 700 சதவீத வரியும் விதிப்பதாக செய்தி தொடர்பாளர் கரோலின் […]

வாழ்வியல்

நெல்லிக்காயை ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் ஏற்படும் நன்மை

  • March 12, 2025
  • 0 Comments

ஆரோக்கியத்தை அள்ளி வழங்கும் அற்புதமான காயான ஆம்லா என்னும் நெல்லிக்காய், ஆயுர்வேதத்தில் கிட்டத்தட்ட நூறு விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாக கருதப்படும் நெல்லிக்காயில் காணப்படும் கூறுகள் உடல் ஆரோக்கியத்தில் பல நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரு மாதம் தினமும் நெல்லிக்காயை உணவில் சேர்த்து வந்தால், உடலும் மனமும் புத்துணர்ச்சி அடைந்து, ஒரு 10 வயது குறைந்ததை போல உணருவீர்கள். நெல்லிகாயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நெல்லிகாயில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, புரதம், கால்சியம், […]

இலங்கை செய்தி

இலங்கையில் பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் – சந்தேக நபர் கைது!

  • March 12, 2025
  • 0 Comments

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கல்னேவ காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றில் அறிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்று முன்தினம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அறிவியல் & தொழில்நுட்பம்

டீப்சீக்கை தொடர்ந்து Manus AI ஏஜென்ட்டை அறிமுகம் செய்யும் சீனா

  • March 12, 2025
  • 0 Comments

கடந்த ஜனவரியில் சீனாவின் டீப்சீக் ஏஐ அசிஸ்டன்ட் உலக அளவில் கவனம் பெற்றது. இந்த நிலையில் தற்போது சீனாவில் இருந்து Manus எனும் ஏஐ ஏஜென்ட் அறிமுகமாகி உள்ளது. வழக்கமான ஏஐ சாட்பாட்டுக்கும் இதற்கும் இடையிலான வித்தியாசம் என்ன என்பதை பார்க்கலாம். உலகில் ஏஐ நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் தான் மகா சக்தி படைத்த நாடுகளாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதில் அமெரிக்கா, சீனா இடையே கடுமையான போட்டி நிலவும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. 2022-ல் […]