இலங்கையில் கோழி இறைச்சி, முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு?
இலங்கையில் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றின் விலைகள் அதிகரித்து வருவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். பண்டிகைக் காலத்தில் இந்த பொருட்களுக்கு அதிக கேள்வி எழுவதே இதற்குக் காரணம் என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். முட்டை ஒன்றின் சில்லறை விலை 39 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், கோழி இறைச்சி ஒரு கிலோ 1,100 ரூபாய் முதல் 1,200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பேலியகொடை […]













