ஐரோப்பா

86 டன் தங்க இருப்பை கைமாற்றிய நெதர்லாந்து – இதுதான் காரணமா?

நெதர்லாந்து அரசாங்கம் அதிகரித்துவரும் புவிசார் அரசியல் பதற்றம் காரணமாக தனது தங்க இருப்பை இடமாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்நாட்டின் மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனது 86 டன் தங்க இருப்பை அமெரிக்கா மற்றும் கனடாவிலிருந்து லண்டனுக்கு இடமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

நியூயார்க் மற்றும் ஒட்டாவாவில் உள்ள தங்க இருப்புகளை விட, லண்டனில் உள்ள தங்க இருப்புகளை எளிதாக வர்த்தகம் செய்ய முடியும் என்று அந்நாட்டின் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதுவே மிக விரைவான அணுகுமுறையாக அமைகிறது,” என்றும் வங்கி வாதிட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வங்கியின்   தலைவர் ஓலாஃப் ஸ்லைஜ்பென்Olaf Sleijpen , இந்த நடவடிக்கையின் மூலம், தங்க இருப்புகளைப் பயன்படுத்தும் திறனை நாங்கள் மேம்படுத்தியுள்ளோம்.

தங்கத்தைப் பயன்படுத்த வேண்டிய தேவை ஒருபோதும் ஏற்படாது என்று நாங்கள் கருதுகிறோம், இருப்பினும், நமது மீள்திறனையும் தயார்நிலையையும் வலுப்படுத்த இது அவசியமாகிறது,” என்று கூறியுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்