ஐரோப்பா

ஸ்பெனியில் வழமைக்கு திரும்பிய மின்வெட்டு : ஒன்றுக்கூடும் பாதுகாப்பு கவுன்சில்!

  • April 29, 2025
  • 0 Comments

ஸ்பெயினில் மின்தடை ஏற்பட்டிருந்த நிலையில் தற்போது 100 சதவீதம் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பரபரப்பான இரவு”க்குப் பிறகு, 99.95% “எரிசக்தி தேவை” பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். 100% “போக்குவரத்து நெட்வொர்க் துணை மின்நிலையங்கள்” மீட்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறுகிறார். “தற்போதைய சூழ்நிலையை பகுப்பாய்வு செய்ய” நாட்டின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இன்று காலை கூடுகிறது என்றும்  சான்செஸ் கூறியுள்ளார்.

இலங்கை

இலங்கையில் நண்பகலுடன் வானிலையில் ஏற்படும் மாற்றம் – மக்களின் கவனத்திற்கு!

  • April 29, 2025
  • 0 Comments

இலங்கையில் பலத்த மின்னல் ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (29) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இன்றிரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது. கிழக்கு, ஊவா, மத்திய, வட-மத்திய, வடக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் பெய்யும் வாய்ப்பு அதிகம். இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, ​​அந்தப் […]

வட அமெரிக்கா

கனடாவில் வெளிவந்த தேர்தல் முடிவுகள் – மீண்டும் ஆட்சியமைக்கும் லிபரல் கட்சி

  • April 29, 2025
  • 0 Comments

கனடாவில் நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. புதிய பிரதமரைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில் மார்க் கார்னியின் லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளது. லிபரல் கட்சி மொத்தமாக 144 இடங்களை வென்றுள்ளதுடன், 21 இடங்களில் முன்னிலையில் உள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் மூலம் தொடர்ந்து நான்காவது முறையாக லிபரல் கட்சி கனடாவில் ஆட்சியமைக்க உள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி இதுவரை 121 இடங்களை வென்றுள்ளதுடன், 26 இடங்களில் […]

வட அமெரிக்கா

உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தம் கோரும் டிரம்ப்

  • April 29, 2025
  • 0 Comments

உக்ரைன் போரை நிறுத்த நிரந்தர போர்நிறுத்தமே தீர்வு என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார். உக்ரைன் – ரஷ்ய போரை முடிவுக்குக் கொண்டு வர நிரந்தர போர்நிறுத்தம் ஏற்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விரும்புவதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இருவரின் செயல்பாடுகள் மீது டிரம்ப் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்தார். […]

இலங்கை

இலங்கையில் கோர விபத்து – 30 பேர் காயம்

  • April 29, 2025
  • 0 Comments

பெலியத்த ஹெட்டியாராச்சி வளைவுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 30 பேர் காயமடைந்துள்ளனர். பெலியத்த நோக்கி பயணித்த தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து டிக்வெல்ல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தங்காலை மருத்துவமனையிலும் பெலியத்த ஹத்போதிய மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வட அமெரிக்கா

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் மீது மோதிய வாகனம் – 4 பிள்ளைகள் பலி

  • April 29, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பிள்ளைப் பராமரிப்பு நிலையம் உள்ள கட்டடத்தின்மீது வாகனம் மோதியதில் 4 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் 4 வயதுக்கும் 18 வயதுக்கும் உட்பட்டவர்களாகும். சம்பவம் நடந்தபோது அவர்களில் மூவர் கட்டடத்திற்கு வெளியேயும் இன்னொருவர் உள்ளேயும் இருந்தனர். அமெரிக்காவின் இலனோய் மாநிலத்தின் சாதாம் என்ற சிறிய ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது. காயமுற்ற சிலர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அம்மாநிலக் காவல்துறை கூறியது. வாகனத்தின் ஓட்டுநருக்கு எந்தக் காயமும் இல்லை. அவர் சோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். சம்பவம் மிகுந்த […]

வாழ்வியல்

இதய ஆரோக்கியத்திற்கு உதவும் 5 இரவு நேர வழக்க மாற்றங்கள்!

  • April 29, 2025
  • 0 Comments

இதய ஆரோக்கியத்தைப் பாதிப்பதில் பகல் நேரச் செயல்பாடுகளைப் போலவே, இரவு நேரப் பழக்கவழக்கங்களும் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் இரவில் மேற்கொள்ளும் சில எளிய மாற்றங்கள், நீண்ட கால நோக்கில் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்க உதவும். பெரும்பாலும் கவனிக்கப்படாத இந்த இரவு நேரப் பழக்கங்கள், நமது ஒட்டுமொத்த நலனையும், குறிப்பாக இதயத்தின் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கின்றன. இந்தப் பதிவில் இதயத்தைப் பாதுகாக்கும் 5 முக்கிய இரவு நேர மாற்றங்கள் என்னென்ன என்று பார்ப்போம். 1. […]

ஐரோப்பா

ஸ்பெயின், போர்ச்சுகல் மின்தடை – படிப்படியாக வழமைக்கு திரும்பும் மின்சாரம்

  • April 29, 2025
  • 0 Comments

ஸ்பெயினிலும் போர்ச்சுகலிலும் மின்சாரம் படிப்படியாக வழமைக்கு திரும்புவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரு நாடுகளிலும் பெரிய அளவிலான மின்தடை ஏற்பட்டது. பொதுப் போக்குவரத்து, மின்படிக்கட்டுகள் உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. தற்போது மின்சார விநியோகம் ஓரளவுக்கு வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டது. 5 விநாடிகளில் சுமார் 15 கிகாவாட்ஸ் மின்சாரம் திடீரென காணாமல்போயுள்ளது. 15 கிகாவாட்ஸ் என்பது அந்தத் தருணத்தில் பயன்பாட்டில் இருந்த மின்சாரத்தில் பாதிக்கும் அதிகமான அளவாகும். ஊழியர்கள் சிலர் இன்று வீட்டில் இருக்க […]

இலங்கை

இலங்கையில் உச்சத்தை எட்டிய தேங்காய் விலை

  • April 29, 2025
  • 0 Comments

இலங்கையில் தேங்காயின் விலை சில பிரதேசங்களில் மீண்டும் அதிகரித்துள்ளதாக தென்னைப் பயிர்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்துள்ளார். 180 ரூபாவிற்கு விற்கப்பட்ட தேங்காய் தற்போது 220 ரூபாய் முதல் 240 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் , மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் அறுவடை 500 மில்லியனை தாண்டும் என்று தென்னை ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. அவ்வாறாயின் தேங்காயின் விலை மீண்டும் குறைவடையும் என்று தென்னைப் பயிர்செய்கை சபையின் […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அசத்தல் அம்சங்களுடன் பிக்சல் 9a ஸ்மார்ட் போன்

  • April 29, 2025
  • 0 Comments

கூகுள் சமீபத்தில் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போனான பிக்சல் 9a வை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. சில சிக்கல்களால் ஏற்பட்ட தாமதங்களுக்குப் பிறகு, பிக்சல் 9a இப்போது இந்தியாவில் விற்பனையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது டென்சர் சிப்செட்டால் இயக்கப்படுகிறது. மேலும், இதில் டூயல் கேமரா செட்அப்-ஐ கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையுடன் ஒரு அறிமுகச் சலுகையும் உள்ளது. எனவே, இந்த பிரீமியம் லெவல் ஸ்மார்ட்போனை அசல் விலையை விட மிகக் குறைந்த விலையில் நீங்கள் […]