வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அனுர – பிரதி அமைச்சர்கள் நியமனம்!
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வியட்நாமுக்கு அரசுமுறை விஜயம் மேற்கொண்டு நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, நான்கு அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சகம், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகங்களுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகத்திற்கும் பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, தொழிலாளர் அமைச்சரும் பொருளாதார மேம்பாட்டு பிரதி அமைச்சருமான டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, […]













