இலங்கை: செம்மணி மயான அகழ்வுப்பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்பு
யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம், மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்றும், மண்டையோடும், கையொன்றும் மீட்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மனித எச்சங்கள், அந்தப் பகுதி ஒரு மனிதப் புதைகுழியா என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன. அந்த மனித எச்சங்கள் 1995, 1996 ஆம் ஆண்டுகளில் […]













