இலங்கை

இலங்கை: செம்மணி மயான அகழ்வுப்பணிகளின் போது மனித எச்சங்கள் மீட்பு

 

யாழ்ப்பாணம் – செம்மணி, சிந்துப்பாத்தி மயானத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வுப் பணிகளின் இரண்டாம் நாளான நேற்றைய தினம், மூன்றடி ஆழத்தில் முழுமையான என்புத்தொகுதியொன்றும், மண்டையோடும், கையொன்றும் மீட்கப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த மனித எச்சங்கள், அந்தப் பகுதி ஒரு மனிதப் புதைகுழியா என பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

அந்த மனித எச்சங்கள் 1995, 1996 ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.

இந்த சந்தேகத்தின் அடிப்படையில், மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தவும், தொடர்ந்து அகழ்வுப் பணிகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம், அகழ்வு பணிகள் ஆரம்பமான நிலையில், நேற்று இரண்டாம் நாள் அகழ்வின்போதே இந்த மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்