லாட்வியாவில் மீண்டும் ட்ரோன் அச்சுறுத்தல் : அச்சத்தில் பால்டிக் நாடுகள்!

ரஷ்ய பகுதியில் இருந்து வந்த ட்ரோன் ஒன்று லாட்விய வான்வெளிக்குள் நுழைந்த நிலையில் அதனை நேட்டோ படைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளனர்.
ட்ரோட் ஊடுறுவலைத் தொடர்ந்து லாட்வியாவின் கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் வீட்டின் உள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர். ட்ரோன் செயலிழக்கச் செய்யப்பட்ட பிறகு அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
ட்ரோனின் தோற்றம் தற்போது தெரியவில்லை என்றாலும், உக்ரைன் சமீபகாலமாக ரஷ்யா மீதான நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
அவற்றில் சில பால்டிக் நாடுகளின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன.
ஐரோப்பாவின் கிழக்கு எல்லையில் தொடர்ச்சியாக எழும் பாதுகாப்பு குறித்த கவலைகளில் இந்தச் சம்பவம் சமீபத்தியதாகும்.
ஷஇது, உக்ரைனில் நடக்கும் மோதல் நேட்டோவின் வடக்குப் பகுதிகளுக்கும் பரவிவிடுமோ என்ற அச்சத்தை மேலும் தூண்டியுள்ளது.





