உலகம் செய்தி

அமைதியை கடைபிடிக்குமாறு பாகிஸ்தான் அவசர வேண்டுகோள்!

அமைதியை அடைவதற்குரிய இறுதி இலக்கு மிக அருகில் இருப்பதால், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைபிடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் Shehbaz Sharif கோரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கிடையில் மீண்டும் போர் மூண்ட நிலையிலேயே , அமைதி பேச்சுக்கு மத்தியஸ்தம் வகிக்கும் பாகிஸ்தான் பிரதமர் மேற்கண்டவாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையில் இஸ்ரேல் மீதான தனது தாக்குதல்களை நிறுத்திக்கொள்வதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

எனினும், லெபனான் மீதான தாக்குதல்கள் தொடர்ந்தால் முன்பை விட மிகவும் கடுமையான முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

அதேவேளையில், டொனால்ட் டிரம்ப்பின் வேண்டுகோளை ஏற்று ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை இஸ்ரேலும் நிறுத்திக்கொள்ளும் என்று இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

” மோதலுக்கு அமைதியான முறையில் ராஜதந்திர ரீதியாகத் தீர்வு காண்பதற்காக நட்பு நாடுகளுடன் இணைந்து நாம் தீவிரமாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றி வருகிறோம்.

குறிப்பாக, இறுதி இலக்கு மிக அருகில் இருக்கும் இந்த வேளையில், அனைத்துத் தரப்பினரும் பொறுமையைக் கடைப்பிடித்து அமைதிக்கு மேலும் ஒரு வாய்ப்பளிக்க வேண்டும்.” எனவும் பாகிஸ்தான் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி